/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/திருத்தேரி சந்திப்பில் சிக்னல் அமைக்க கோரி போராட்டம்திருத்தேரி சந்திப்பில் சிக்னல் அமைக்க கோரி போராட்டம்
திருத்தேரி சந்திப்பில் சிக்னல் அமைக்க கோரி போராட்டம்
திருத்தேரி சந்திப்பில் சிக்னல் அமைக்க கோரி போராட்டம்
திருத்தேரி சந்திப்பில் சிக்னல் அமைக்க கோரி போராட்டம்
ADDED : ஜன 28, 2024 04:01 AM

மறைமலை நகர்: திருச்சி -- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், சிங்கபெருமாள் கோவில் அடுத்த திருத்தேரி சந்திப்பில், தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.
இந்த பகுதியில் சாலை அகலப்படுத்தப்பட்டதில் இருந்து அடிக்கடி விபத்துகள் நடைபெற்று, உயிரிழப்பு அதிகரித்து வருகின்றன.
எனவே, இந்த பகுதியில் விபத்துகளை தடுக்க சிக்னல் அமைக்க வேண்டும் என, அப்பகுதியினர் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், சிங்கபெருமாள் கோவில் பகுதியை சேர்ந்த அனைத்து கட்சி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், குடியிருப்போர் நல சங்கங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.
சிங்கபெருமாள் கோவிலில் கட்டி முடிக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு வராமல் உள்ள அவசர சிகிச்சை மருத்துவமனையை திறக்க வேண்டும், பாதசாரிகள் பயன்படுத்தும் வகையில் தனியாக சர்வீஸ் சாலை அமைத்து தரவேண்டும்.
தேசிய நெடுஞ்சாலையில் எரியாமல் உள்ள மின் விளக்குகளை உடனடியாக சரிசெய்ய வேண்டும் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதுகுறித்து போக்குவரத்து போலீசார் கூறியதாவது:
ஜி.எஸ்.டி., சாலையில் திருத்தேரி, சிங்கபெருமாள் கோவில், பேரமனூர் போர்டு, மறைமலைநகர், பொத்தேரி சந்திப்புகளில் சிக்னல் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த பகுதியில் சிக்னல் அமைக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.