/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/வண்டலுாரில் ரயில் மோதி ராமநாதபுரம் வாலிபர் பலிவண்டலுாரில் ரயில் மோதி ராமநாதபுரம் வாலிபர் பலி
வண்டலுாரில் ரயில் மோதி ராமநாதபுரம் வாலிபர் பலி
வண்டலுாரில் ரயில் மோதி ராமநாதபுரம் வாலிபர் பலி
வண்டலுாரில் ரயில் மோதி ராமநாதபுரம் வாலிபர் பலி
ADDED : மே 27, 2025 07:48 PM
வண்டலுார்:வண்டலுார் ரயில் நிலையம் அருகே, தண்டவாளத்தைக் கடந்த வாலிபர், ரயில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.
ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் தனபாலகிருஷ்ணன், 29.
இவர், வண்டலுாரில் தங்கி, தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு, வண்டலுார் ரயில் நிலையத்தில், தண்டவாளத்தை கவனக் குறைவாக கடந்த போது, அவ்வழியாக வந்த ரயிலில் அடிபட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்த தாம்பரம் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, தனபாலகிருஷ்ணன் உடலை கைப்பற்றினர்.
பின், பிரேத பரிசோதனைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.