/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ ஏரிகாத்த ராமர் கோவிலில் திருப்பணிகள் மும்முரம் ஏரிகாத்த ராமர் கோவிலில் திருப்பணிகள் மும்முரம்
ஏரிகாத்த ராமர் கோவிலில் திருப்பணிகள் மும்முரம்
ஏரிகாத்த ராமர் கோவிலில் திருப்பணிகள் மும்முரம்
ஏரிகாத்த ராமர் கோவிலில் திருப்பணிகள் மும்முரம்
ADDED : மார் 16, 2025 01:50 AM

மதுராந்தகம்:மதுராந்தகம் நகரிலுள்ள ஏரிகாத்த ராமர் கோவிலில் திருப்பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
மதுராந்தகம் நகரில் வைணவத் திருத்தலங்களில் ஒன்றான புகழ் பெற்ற ஏரி காத்த ராமர் என அழைக்கப்படும், கோதண்டராமர் கோவில் உள்ளது.
ஹிந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இக்கோவில் செயல்பட்டு வருகிறது. மூலவர் சன்னிதியில் ராமர் சீதையை கைப்பற்றியவாறு திருமணக்கோலத்தில் அமைந்திருப்பது சிறப்பு பெற்ற ஸ்தலமாகும்.
பல்வேறு சிறப்புகள் பெற்ற மதுராந்தகம் ஏரி காத்த கோதண்டராமர் கோவிலில் இந்தாண்டு, கும்பாபிஷேகம் நடத்துவதற்காக, கடந்த ஆண்டு, பாலாலயம் செய்யப்பட்டு, கண்ணாடி அறைக்குள் சாமி வைக்கப்பட்டு உள்ளது.
தற்போது, உபயதாரர்கள் நிதி வாயிலாக, கோவிலில் புணரமைப்பு பணிகளும், வர்ணம் தீட்டும் பணிகளும் மும்முரமாக நடந்து வருகின்றன.
ஜூலை மாதம் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால், பணிகளை விரைந்து முடிக்க திட்டமிட்டு உள்ளதாக ஹிந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.