Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ உயர்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு விரைவில் சான்றிதழ் வழங்க கோரிக்கை

உயர்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு விரைவில் சான்றிதழ் வழங்க கோரிக்கை

உயர்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு விரைவில் சான்றிதழ் வழங்க கோரிக்கை

உயர்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு விரைவில் சான்றிதழ் வழங்க கோரிக்கை

ADDED : மே 23, 2025 09:48 PM


Google News
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், பள்ளி, கல்லுாரிகளில் மாணவர்கள் சேருவதற்கு சான்றிதழ்கள் வருவாய்த்துறையினர், உடனுக்குடன் வழங்க வேண்டும் என, பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு, திருப்போரூர், வண்டலுார், தாம்பரம், பல்லாவரம் ஆகிய தாலுகா பகுதிகளில், இலவச வீட்டுமனை பட்டா வழங்க அரசு உத்தரவிட்டது.

அதன்பின், தாலுகா பகுதியில் உள்ள, கிராமங்களில், ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்குளில், வசித்துவருபர்கள் குறித்து, கிராம நிர்வாக அலுவலர்கள் தேர்வு செய்து, தாசில்தாரிடம் சமர்பிக்கின்றனர்.

இப்பணியில், மண்டல துணை தாசில்தார், தாசில்தார், வருவாய் கோட்டாட்சியர்கள் முழு வீச்சில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில். பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெயிடப்பட்டது.

இதில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், பள்ளி, கல்லுாரிகளில் சேருவதற்கு, ஜாதி, இருப்பிடம், வருமானச்சான்று கண்டிப்பாக தேவை. இச்சசான்றுகோரி, செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், வண்டலுார், தாம்பரம், பல்லாவரம் ஆகிய தாலுகாக அலுவலங்களில் சமர்பிக்கின்றனர்.

இவர்களுக்கு உடனடியாக சான்றிதழ்கள் தேவை ஏற்படுகிறது. தற்போது, வீட்டுமனை பட்டா வழங்கும் பணியில் வருவாய்த்துறையினர் ஈடுபட்டுள்ளதால், சான்றிதழ்கள் வழங்க காலதாமதம் ஏற்படுவதாக, பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே, மாணவர்கள் நலன்கருதி, சான்றிதழ்கள் விரைவாக கிடைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் வலியுறுத்தி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us