/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ பூட்டப்பட்ட பொது கழிப்பறை பயன்பாட்டிற்கு திறக்க கோரிக்கை பூட்டப்பட்ட பொது கழிப்பறை பயன்பாட்டிற்கு திறக்க கோரிக்கை
பூட்டப்பட்ட பொது கழிப்பறை பயன்பாட்டிற்கு திறக்க கோரிக்கை
பூட்டப்பட்ட பொது கழிப்பறை பயன்பாட்டிற்கு திறக்க கோரிக்கை
பூட்டப்பட்ட பொது கழிப்பறை பயன்பாட்டிற்கு திறக்க கோரிக்கை
ADDED : மே 25, 2025 01:41 AM

மதுராந்தகம்:மதுராந்தகம் நகராட்சிக்கு உட்பட்ட ஹவுசிங் போர்டு பகுதியில் உள்ள, பொது கழிப்பறையை திறக்க வேண்டுமென, பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மதுராந்தகம் நகராட்சி, 24 வார்டுகளை உடையது. இதில் 6வது வார்டுக்கு உட்பட்ட, மதுராந்தகம் -- அருங்குணம் சாலையில், நகராட்சி நிர்வாகம் சார்பில், 2004ல் குளியலறை மற்றும் நவீன கழிப்பறைகளுடன், பொது கழிப்பறை வளாகம் கட்டப்பட்டு, பயன்படுத்தப்பட்டு வந்தது.
2021- 22-ல் பராமரிப்பு மற்றும் புதுப்பித்தல் பணி நடைபெற்றது.
ஆனால், கடந்த சில ஆண்டுகளாக, இந்த கழிப்பறை திறக்கப்படாமல் பூட்டி வைக்கப்பட்டுள்ளது.
ஹவுசிங் போர்டு பகுதிவாசிகள் இதுகுறித்து பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, புதுப்பித்தல் பணி நடைபெற்று திறக்கப்படாமல் உள்ள இந்த பொது கழிப்பறையை, நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து, மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டுமென, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.