/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ அணுமின் நிலையம் சார்பில் பள்ளி கட்டடம், குடிநீர் மையம் அணுமின் நிலையம் சார்பில் பள்ளி கட்டடம், குடிநீர் மையம்
அணுமின் நிலையம் சார்பில் பள்ளி கட்டடம், குடிநீர் மையம்
அணுமின் நிலையம் சார்பில் பள்ளி கட்டடம், குடிநீர் மையம்
அணுமின் நிலையம் சார்பில் பள்ளி கட்டடம், குடிநீர் மையம்
ADDED : செப் 26, 2025 03:01 AM
மாமல்லபுரம்:சென்னை அணுமின் நிலையம் சார்பில், 1.04 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட அரசுப்பள்ளி கட்டடம் மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு மையங்கள் பயன்பாட்டிற்கு துவக்கப்பட்டது.
கல்பாக்கத்தில் இயங்கி வரும் சென்னை அணுமின் நிலைய நிர்வாகம், பெருநிறுவன சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ், சுற்றுப்புற பகுதிகளில் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
திருக்கழுக்குன்றம் அடுத்த எடையாத்துாரில் செயல்படும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு, புதிய கட்டடம் கட்டுமாறு வலியுறுத்தியதை தொடர்ந்து, நிலைய நிர்வாகம் 66 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய கட்டடம் கட்டியது.
மேலும், கல்பாக்கம் அடுத்த வசுவசமுத்திரம், ஆயப்பாக்கம், பேரம்பாக்கம் ஆகிய பகுதிகளில், தலா 16 லட்சம் ரூபாய் மதிப்பில், குடிநீர் சுத்திகரிப்பு மையம் அமைத்தது. நிலைய இயக்குநர் சேஷையா, இவற்றை பயன்பாட்டிற்கு துவக்கினார்.