/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/மாநில அளவிலான கராத்தே வெற்றி பெற்றோருக்கு பரிசுமாநில அளவிலான கராத்தே வெற்றி பெற்றோருக்கு பரிசு
மாநில அளவிலான கராத்தே வெற்றி பெற்றோருக்கு பரிசு
மாநில அளவிலான கராத்தே வெற்றி பெற்றோருக்கு பரிசு
மாநில அளவிலான கராத்தே வெற்றி பெற்றோருக்கு பரிசு
ADDED : பிப் 01, 2024 10:51 PM

தாம்பரம்:தாம்பரம் ஜே.கே., ஷிட்டோரியோ கராத்தே பள்ளி சார்பில், மாநில அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி, மேற்கு தாம்பரத்திலுள்ள தனியார் கல்லுாரியில், ஜன., 28ம் தேதி நடந்தது.
இதில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த, 800 மாணவர்கள் பங்கேற்றனர்.
குமுத்தே, கட்டா ஆகிய இரண்டு பிரிவுகளில் நடந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, திரைப்பட சண்டைப் பயிற்சி இயக்குனர் ஜாக்குவார் தங்கம் பரிசுகளை வழங்கினார்.
ஜே.கே., ஷிட்டோரியோ பள்ளியின் தலைவர் ஜெய்குமார், செயலர் மகேஷ்குமார் மற்றும் கராத்தே மாஸ்டர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


