/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/மாநில அளவிலான வாலிபால் சென்னை பள்ளிகள் அசத்தல்மாநில அளவிலான வாலிபால் சென்னை பள்ளிகள் அசத்தல்
மாநில அளவிலான வாலிபால் சென்னை பள்ளிகள் அசத்தல்
மாநில அளவிலான வாலிபால் சென்னை பள்ளிகள் அசத்தல்
மாநில அளவிலான வாலிபால் சென்னை பள்ளிகள் அசத்தல்
ADDED : பிப் 24, 2024 11:02 PM

சென்னை:பள்ளிகளுக்கு இடையிலான மாநில அளவிலான வாலிபால் போட்டியில், சென்னை மாவட்ட பள்ளிகள் பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்று, அசத்தி வருகின்றன.
லைப் ஸ்போர்ட்ஸ் அகாடமி, பள்ளிகளுக்கு இடையிலான வாலிபால் மற்றும் பீச் வாலிபால் போட்டிகளை, பெரம்பூர் டான்பாஸ்கோ பள்ளி வளாகத்தில் நடத்தி வருகிறது.
இதில், 12, 14 வயதிற்கு உட்பட்டோருக்கான இருபாலருக்கான வாலிபால் போட்டியும், 13 வயதிற்கு உட்பட்ட இருபாலருக்கான பீச் வாலிபால் போட்டியும் நடக்கின்றன.
சென்னை, திருவள்ளூர், வேலுார் உட்பட மாநில முழுதும் இருந்து, 100க்கும் மேற்பட்ட பள்ளி அணிகள் பங்கேற்றுள்ளன.
ஆடவருக்கான 13 வயது பீச் வாலிபாலில், துாத்துக்குடி போப்ஸ பள்ளி முதலிடத்தையும், சென்னை டான்பாஸ்கோ பள்ளி, பி.ஏ.கே.பி., மற்றும் வேலுார் கோம்போர்டு பள்ளிகள் அடுத்தடுத்த இடங்களை வென்றன.
12 வயதினருக்கான போட்டியில் துாத்துக்குடி போப்ஸ், சென்னை டான்பாஸ்கோ, துாத்துக்குடி செயின்ட் மேரிஸ், சென்னை செயின்ட் பீட்ஸ் ஆகிய அணிகள் முறையே, அடுத்தடுத்த இடங்களை வென்றன.
மாணவியருக்கான ஆட்டத்தில், சென்னை பெண்கள் அரசு பள்ளி,'ஏ' மற்றும் 'பி' அணிகள், முதல் இரண்டு இடங்களை வென்றன.
திருவள்ளூர் ஜெயகோபால் கரோடியா மற்றும் சென்னை பெனிடிக் பள்ளிகள் மூன்று மற்றும் நான்காம் இடங்களை கைப்பற்றின.
தொடர்ந்து, ஆடவருக்கான 14 வயது பிரிவில் சென்னை டான்பாஸ்கோ முதலிடத்தையும், துாத்துக்குடி போப்ஸ் மற்றும் சென்னை செயின்ட் பீட்ஸ் அடுத்தடுத்த இடங்களையும் வென்றன. போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.