/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ தரமற்ற சிமென்ட் கல் சாலை கூடலுாரில் பெயர்த்தெடுப்பு தரமற்ற சிமென்ட் கல் சாலை கூடலுாரில் பெயர்த்தெடுப்பு
தரமற்ற சிமென்ட் கல் சாலை கூடலுாரில் பெயர்த்தெடுப்பு
தரமற்ற சிமென்ட் கல் சாலை கூடலுாரில் பெயர்த்தெடுப்பு
தரமற்ற சிமென்ட் கல் சாலை கூடலுாரில் பெயர்த்தெடுப்பு
ADDED : மே 24, 2025 08:45 PM

அச்சிறுபாக்கம்:கூடலுாரில் தரமற்ற முறையில் பதிக்கப்பட்ட சிமென்ட் கல் சாலை பெயர்த்தெடுக்கப்பட்டது.
அச்சிறுபாக்கம் ஒன்றியத்தில், கூடலுார் ஊராட்சி உள்ளது.
இங்குள்ள ஆதிதிராவிடர் குடியிருப்பு குறுக்கு தெருவில், -2024 - 25ல் 6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சிமென்ட் கல் சாலை அமைக்கப்பட்டது.
சாலை அமைத்து, ஒரு சில நாட்களில் ஆங்காங்கே சிமென்ட் கல் பெயர்ந்தும், சாலை மேடு - பள்ளமாக காணப்பட்டது.
அதனால் அப்பகுதியினர், உதவி இயக்குனர் ஊராட்சி மற்றும் அச்சிறுபாக்கம் வட்டார வளர்ச்சி அதிகாரிகளுக்கு புகார் மனு அளித்தனர்.
புகாரின்படி, சில நாட்களுக்கு முன் அப்பகுதிக்கு சென்று ஆய்வு செய்த அதிகாரிகள், தரமற்ற முறையில் அமைக்கப்பட்ட சிமென்ட் கல் சாலையை பெயர்த்தெடுத்து, மீண்டும் அமைக்க ஒப்பந்ததாரருக்கு உத்தரவிட்டுள்ளனர்.
அதனால், சாலையில் பதிக்கப்பட்ட சிமென்ட் கல், தற்போது பெயர்த்தெடுக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், கூடலுார் ஊராட்சியில், பல இடங்களில் இதுபோன்று தரமற்ற முறையில் சிமென்ட் கல் சாலை அமைக்கப்பட்டு உள்ளதால், அதிகாரிகள் அவற்றை ஆய்வு செய்ய வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.