/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/பூனை இறந்து கிடந்த விவகாரம் புதிய குடிநீர் தொட்டி அமைப்புபூனை இறந்து கிடந்த விவகாரம் புதிய குடிநீர் தொட்டி அமைப்பு
பூனை இறந்து கிடந்த விவகாரம் புதிய குடிநீர் தொட்டி அமைப்பு
பூனை இறந்து கிடந்த விவகாரம் புதிய குடிநீர் தொட்டி அமைப்பு
பூனை இறந்து கிடந்த விவகாரம் புதிய குடிநீர் தொட்டி அமைப்பு
ADDED : ஜன 28, 2024 04:21 AM

மதுராந்தகம்: மதுராந்தகம் நகராட்சியில், பழைய போலீஸ் குடியிருப்பு அருகே, ஜி.எஸ்.டி., சாலையில் உள்ள பேருந்து நிறுத்தம் பகுதியில், பொதுமக்களின் தேவைக்காக, சிறிய அளவிலான குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது.
இந்த குடிநீர் தொட்டியின் மேல்பகுதியில் மூடி இல்லாததால், பூனை ஒன்று தவறி விழுந்து, உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
இந்த குடிநீர் தொட்டியில், பூனை இறந்து கிடப்பதை அறியாத அப்பகுதி வாசிகள், இந்த தண்ணீரை குடித்து தாகம் தீர்த்து வந்தனர்.
இதையடுத்து, குடிநீரில் இருந்து துர்நாற்றம் வீசியதால், சந்தேகமடைந்த அப்பகுதியினர், குடிநீர் தொட்டியின் உள்ளே பார்த்தபோது, பூனை இறந்து கிடப்பது தெரிய வந்தது.
அதன்பின், அப்பகுதியினர் ஒன்று சேர்ந்து, இறந்து கிடந்த பூனையை அப்புறப்படுத்தினர். இதுகுறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக, நகராட்சி நிர்வாகத்தின் சார்பில், பழைய குடிநீர் தொட்டி அப்புறப்படுத்தப்பட்டு, புதிதாக குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு உள்ளது.