/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/மேல்மருவத்துாரில் இருசக்கர வாகனம் திருட்டுமேல்மருவத்துாரில் இருசக்கர வாகனம் திருட்டு
மேல்மருவத்துாரில் இருசக்கர வாகனம் திருட்டு
மேல்மருவத்துாரில் இருசக்கர வாகனம் திருட்டு
மேல்மருவத்துாரில் இருசக்கர வாகனம் திருட்டு
ADDED : மார் 16, 2025 09:01 PM
மேல்மருவத்துார்:மேல்மருவத்துார் காவல் எல்லைக்கு உட்பட்ட மஹாத்மா காந்தி தெருவைச் சேர்ந்தவர் ஜெகதீஸ், 28.
இவர், நேற்று முன்தினம் இரவு, தனக்குச் சொந்தமான 'ஹீரோ ஹோண்டா ஸ்பிளெண்டர் ப்ளஸ்' இருசக்கர வாகனத்தை, வீட்டின் அருகே நிறுத்திவிட்டு, உறங்கச் சென்றார்.
நேற்று காலை எழுந்து பார்த்தபோது, வாகனம் திருடு போயிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
பின், மேல்மருவத்துார் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார்.
புகாரின்படி வழக்கு பதிவு செய்த மேல்மருவத்துார் போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்து, விசாரித்து வருகின்றனர்.