Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ 'சீப் பிளானர்'கள் பணியிடம் காலி சி.எம்.டி.ஏ.,வில் பணிகள் பாதிப்பு

'சீப் பிளானர்'கள் பணியிடம் காலி சி.எம்.டி.ஏ.,வில் பணிகள் பாதிப்பு

'சீப் பிளானர்'கள் பணியிடம் காலி சி.எம்.டி.ஏ.,வில் பணிகள் பாதிப்பு

'சீப் பிளானர்'கள் பணியிடம் காலி சி.எம்.டி.ஏ.,வில் பணிகள் பாதிப்பு

ADDED : அக் 09, 2025 03:14 AM


Google News
சென்னை, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ.,வில், ஆறு சீப் பிளானர்கள் இருக்க வேண்டிய இடத்தில், இரண்டு பேர் மட்டுமே இருப்பதால், பணிகள் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

சி.எம்.டி.ஏ.,வில் உறுப்பினர் செயலர், தலைமை செயல் அலுவலர் ஆகிய இடங்களில், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நியமிக்கப்படுவர்.

அனுமதி இவர்களுக்கு அடுத்த நிலையில் தொழில்நுட்ப ரீதியாக பல்வேறு திட்டங்களில் முக்கிய முடிவுகள் எடுக்க, சீப் பிளானர்கள் பணியிடம் உள்ளது.

இங்கு முழுமை திட்டம், பரப்பு திட்டப்பிரிவு, பரப்பு வளர்ச்சி பிரிவு, அமலாக்கப்பிரிவு, சாலை - ரயில் திட்டப்பிரிவு ஆகியவற்றுக்கு, சீப் பிளானர்கள் நியமிக்கப்படுவர்.

இவர்களுக்கு கீழ், மூத்த திட்ட அலுவலர்கள், துணை திட்ட அலுவலர்கள் என அதிகாரிகள் இருப்பர். இந்த நிலையில், சி.எம்.டி.ஏ.,வுக்கு அனுமதிக்கப்பட்ட, ஆறு சீப் பிளானர்கள் பணியிடங்களில், தற்போது இரண்டு பேர் மட்டுமே இருப்பதாக புகார் எழுந்துள்ளது.

நகரமைப்பு வல்லுநர்கள் கூறியதாவது:

சி.எம்.டி.ஏ.,வில் பல்வேறு பிரிவுகளில் பணிகள் அதிகரித்து வரும் நிலையில், ஆறு சீப் பிளானர் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டன. இதில் ஐந்து பேர், சி.எம்.டி.ஏ.,விலும், ஒருவர் போக்குவரத்து குழுமமான 'கும்டா'விலும் பணிபுரிய வேண்டும்.

ஆனால், தற்போதைய நிலவரப்படி, ரவிகுமார், ருத்ரமூர்த்தி ஆகிய இரண்டு பேர் மட்டுமே, சி.எம்.டி.ஏ.,வில் சீப் பிளானர்களாக உள்ளனர். மூன்றாவதாக சீப் பிளானரான காஞ்சனமாலா, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையின் கூடுதல் செயலராக சென்றுவிட்டார்.

ப ொறுப்பு தற்போது சீப் பிளானர்களாக இருப்பவர்களில், ருத்ரமூர்த்தி சில மாதங்களில் ஓய்வு பெற உள்ளார். இருப்பினும், மூத்த திட்ட அலுவலர்களில் இருந்து பணி மூப்பு அடிப்படையில் தகுதி பெறும் நபர்களை, சீப் பிளானர்களாக நியமிக்க நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.

கடந்த, 2020 முதல், மூத்த திட்ட அலுவலர், துணை திட்ட அலுவலர் நிலையில் உரிய முறையில் பதவி உயர்வு வழங்கப்படாததால், தற்போது சீப் பிளானர் ஆவதற்கு தகுதியுடைய நபர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், சீப் பிளானர்கள் கவனிக்க வேண்டிய பொறுப்புகளை மூத்த திட்ட அதிகாரிகள் கையாளும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அடுத்து என்ன செய்வது என்பது குறித்து உயரதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us