Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ பள்ளிக்கரணைக்கு முன்கூட்டியே வந்த வெள்ளை வாலாட்டி பறவைகள்

பள்ளிக்கரணைக்கு முன்கூட்டியே வந்த வெள்ளை வாலாட்டி பறவைகள்

பள்ளிக்கரணைக்கு முன்கூட்டியே வந்த வெள்ளை வாலாட்டி பறவைகள்

பள்ளிக்கரணைக்கு முன்கூட்டியே வந்த வெள்ளை வாலாட்டி பறவைகள்

ADDED : அக் 13, 2025 12:44 AM


Google News
Latest Tamil News
சென்னை:சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதிக்கு, வழக்கத்தைவிட முன்கூட்டியே வெள்ளை வாலாட்டி பறவைகள் வந்துள்ளது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

வனத்துறையால் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட, சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு, 202 வகை பறவைகள் வந்து செல்கின்றன.

ஆண்டுதோறும் செப்., முதல் நவ., வரை, வெளிநாட்டு பறவைகள் அதிகம் வரும். வாலாட்டி பறவைகள் நவம்பரில்தான் வருவது வழக்கம். இந்த ஆண்டு, அக்., இரண்டாம் வாரத்திலேயே வந்துள்ளன.

இதுகுறித்து, 'தி நேச்சர் டிரஸ்ட்' அமைப்பின் நிறுவனர் திருநாரணன் கூறியதாவது:

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் இந்த ஆண்டு நடந்த, மாதாந்திர கணக்கெடுப்பின்படி, 97 வகைகளை சேர்ந்த, 14,000 பறவைகள் வந்துள்ளன. வனத்துறையுடன் இணைந்து நடத்திய கணக்கெடுப்பில், இந்த விபரம் தெரிய வந்துள்ளது.

வழக்கத்தைவிட ஒரு மாதம் முன்கூட்டியே வெள்ளை வாலாட்டி பறவைகள் வந்துள்ளன. தற்போதைய நிலவரப்படி, 4 வெள்ளை வாலாட்டிகள் வந்துள்ளன. ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இவை வருகின்றன.

இதேபோன்று, எலுமிச்சை வாலாட்டிகள் பரவலாக காணப்படுகின்றன. சாம்பல் தலை ஆள்காட்டி வகையை சேர்ந்த பறவைகளும் வந்துள்ளன. வழக்கத்தைவிட முன்கூட்டியே பறவைகள் வருவது, ஆர்வலர்களுக்கு ஆச்சரியமாக அமைந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us