Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ தாம்பரம் போக்குவரத்து காவல் நிலையத்தில் நுண்ணறிவு போலீசாரின்றி பணிகள் பாதிப்பு

 தாம்பரம் போக்குவரத்து காவல் நிலையத்தில் நுண்ணறிவு போலீசாரின்றி பணிகள் பாதிப்பு

 தாம்பரம் போக்குவரத்து காவல் நிலையத்தில் நுண்ணறிவு போலீசாரின்றி பணிகள் பாதிப்பு

 தாம்பரம் போக்குவரத்து காவல் நிலையத்தில் நுண்ணறிவு போலீசாரின்றி பணிகள் பாதிப்பு

ADDED : டிச 03, 2025 06:15 AM


Google News
Latest Tamil News
மறைமலை நகர்: பொத்தேரியில் செயல்பட்டு வரும் தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் நிலையத்திற்கு, நுண்ணறிவு பிரிவு போலீசார் நியமிக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.

மறைமலை நகர் காவல் நிலையமானது, தாம்பரம் போலீஸ் கமிஷனரக கட்டுப்பாட்டில், 2022 ஜனவரியில் இருந்து செயல்பட துவங்கியது.

மூன்று ஆண்டுகள் இதையடுத்து, சட்டம் - ஒழுங்கு, குற்றப்பிரிவு, அனைத்து மகளிர் காவல் நிலையம், போக்குவரத்து, போக்குவரத்து புலனாய்வு பிரிவு என, தனித்தனியாக காவல் நிலையங்கள் பிரிக்கப்பட்டு, செயல்பட்டு வருகின்றன.

இதில், மறைமலை நகர் போக்குவரத்து காவல் நிலையம் மற்றும் தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் நிலையம் ஆகியவை பொத்தேரியில் செயல்பட்டு வருகின்றன.

இந்த காவல் நிலையங்கள் செயல்பட துவங்கி மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில், போக்குவரத்து மற்றும் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் நிலையங்களுக்கென, தனியாக நுண்ணறிவு பிரிவு போலீசார் நியமிக்கப்படவில்லை.

போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ஏற்படும் விபத்து, விபத்து குறித்த விசாரணை, போலீசாரின் நடவடிக்கைகள், போலீசாரின் நடத்தைகள், செயல்பாடுகள் குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் அனுப்புவது நுண்ணறிவு பிரிவு போலீசாரின் முக்கிய வேலை.

முறைகேடு ஆனால், இந்த காவல் நிலையத்தில் நுண்ணறிவு பிரிவு போலீசார் இல்லாததால், விபத்து தொடர்பாக போலீசார் அளிக்கும் தகவல்களே இறுதியானதாக உள்ளன.

உயரதிகாரிகளுக்கும் இந்த தகவல்களே அளிக்கப்படுகின்றன. அதே போல, விபத்து விசாரணைகள் பல மூடி மறைக்கப்படுவதுடன், ஒரு சில போலீசாரின் விசாரணையில் முறை கேடுகள் நடைபெறுவதாக கூறப்படுகிறது.

எனவே, இந்த காவல் நிலையத்திற்கு நுண்ணறிவு பிரிவு போலீசார் நியமிக்கப்பட வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

சிக்கல் தொடர்கிறது

மறைமலை நகர் காவல் நிலையத்தில் உள்ள நுண்ணறிவு பிரிவு போலீசாரே, கூடுதல் பணியாக தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் நிலையத்தில் பணி செய்து வருகின்றனர். போலீஸ் கமிஷனரகம் திறக்கப்பட்ட போது, இரண்டு நுண்ணறிவு பிரிவு போலீசார் இருந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒரு நுண்ணறிவு பிரிவு போலீசார் மட்டுமே பணியில் உள்ளார். இதன் காரணமாக, புறநகரில் விபத்து நடை பெறும் பகுதிகளைக் கண்டறிவதிலும் சிக்கல் தொடர்கிறது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us