சாலையில் இருந்த 10 கடைகள் அகற்றம்
சாலையில் இருந்த 10 கடைகள் அகற்றம்
சாலையில் இருந்த 10 கடைகள் அகற்றம்
ADDED : மார் 13, 2025 12:11 AM

தி.நகர், கோடம்பாக்கம் மண்டலம், தி.நகர், மகாராஜபுரம் சந்தானம் சாலை நடைபாதையில் ஆக்கிரமித்து, இரண்டு பங்க் உட்பட 10க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டிருந்தன.
அவற்றை, கோடம்பாக்கம் மண்டலம் செயற் பொறியாளர் இனியன் தலைமையிலான அதிகாரிகள், நேற்று அப்புறப்படுத்தினர்.
அப்போது, வியாபாரிகள் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. எனினும், கடைகளை, ஊழியர்கள் அகற்றினர்.