ADDED : ஜூன் 07, 2024 12:20 AM
வேப்பேரி, சென்னையில், ஏழு நாட்களாக வெவ்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில், மொபைல்போன் பறிப்பு, திருட்டு தொடர்பான வழக்கில் தொடர்புடைய, 5 இளஞ்சிறார்கள் உட்பட, 39 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
கைது செய்யப்பட்டோரிடம் இருந்து, 20 சவரன் நகை, 2.16 லட்சம் ரொக்கம், 8 மொபைல் போன்கள், 2 ஆட்டோ, பைக், சைக்கிள் தலா ஒன்றை பறிமுதல் செய்துள்ளனர்.
அதேபோல், வாகன திருட்டில் ஈடுபட்ட, இளஞ்சிறார் ஒருவர் உட்பட, 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து, 6 இருசக்கர வாகனம் மற்றும் லாரி ஒன்றை பறிமுதல் செய்துள்ளனர்.