ADDED : ஜூன் 04, 2024 12:37 AM
சென்னை, பெண் போலீசாரை அவதுாறாக பேசி கைதான சவுக்கு சங்கர் மீது 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், கடந்த 12ம் தேதி, சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்.
அதை எதிர்த்து, சவுக்கு சங்கர் தாய் தொடர்ந்த மனு மீது, இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினர். இவ்வழக்கில் தீர்வு காண மூன்றாவது நீதிபதி விசாரணைக்கும் பரிந்துரைத்தனர்.
இந்நிலையில், வழக்கின் மூன்றாவது நீதிபதியாக ஜி.ஜெயச்சந்திரனை நியமித்து பொறுப்பு தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.