/உள்ளூர் செய்திகள்/சென்னை/ அரவிந்தன் செல்வராஜ் 'அசோசெம்' தலைவர் அரவிந்தன் செல்வராஜ் 'அசோசெம்' தலைவர்
அரவிந்தன் செல்வராஜ் 'அசோசெம்' தலைவர்
அரவிந்தன் செல்வராஜ் 'அசோசெம்' தலைவர்
அரவிந்தன் செல்வராஜ் 'அசோசெம்' தலைவர்
ADDED : ஜூன் 20, 2024 12:46 AM

சென்னை, அசோசெம் தமிழ்நாடு மாநில வளர்ச்சி கவுன்சிலின் தலைவராக காவேரி மருத்துவமனையின் செயல் இயக்குனர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
அம்மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
எலும்பு முறிவு அறுவை சிகிச்சை துறையில் தங்கப்பதக்கம் வென்று தேர்ச்சி பெற்ற டாக்டர் அரவிந்தன் செல்வராஜ், உலகின் பல்வேறு நாடுகளில் மருத்துவ சேவையாற்றியவர். காவேரி மருத்துவமனையின் இணை நிறுவனராகவும், செயல் இயக்குனராகவும் உள்ளார்.
இந்நிலையில், தொழில் அமைப்புகளில் பிரதானமாக கருதப்படும், அசோசெம் என்ற அசோசியேட்டட் சேம்பர்ஸ் ஆப் காமர்ஸ் அண்டு இண்டஸ்ட்ரியின், தமிழக வளர்ச்சி கவுன்சிலுக்கான தலைவராக, டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே அவர் 2022 - 24 வரை அப்பொறுப்பில் இருந்தார். மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அவர், அடுத்தாண்டு வரை அப்பொறுப்பில் இருப்பார்.
அசோக் லேலண்ட் நிறுவனத்தின் இயக்குனர் கோபால் மகாதேவன், சீமென்ஸ் டிஜிட்டல் இண்டஸ்ட்ரீஸ் சாப்ட்வேர் சர்வீசஸ் இயக்குனர் அய்யப்பன் ராமமூர்த்தி, ஸ்டீல் கிளஸ்டர் சர்வீசஸ் சேலம் லிமிடெட் நிறுவன இயக்குனர் மாரியப்பன் ஆகியோர் இணை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.