ADDED : ஜூன் 17, 2024 01:30 AM
படப்பை:படப்பை அருகே, அம்மணம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலு, 43; ஆசாரி.
'ஸ்பிளண்டர்' ரக பைக்கில் வண்டலுார் - வாலாஜாபாத் நெடுஞ்சாலையில், படப்பை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே சென்றபோது, பின்னால் வந்த பைக், வேலு சென்ற பைக் மீது மோதியது.
இதில் தடுமாறி விழுந்த வேலு மீது, மற்றொரு பைக் ஏறியது. அடுத்தடுத்து இரண்டு பைக்குகள் மோதியதில் பலத்த காயமடைந்த வேலு, சம்பவ இடத்திலேயே பலியானார்.
தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், வேலு உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்; மேற்கொண்டு விசாரிக்கின்றனர்.