Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ வழிப்பறியில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுனர்கள்

வழிப்பறியில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுனர்கள்

வழிப்பறியில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுனர்கள்

வழிப்பறியில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுனர்கள்

ADDED : ஜூலை 02, 2024 01:26 AM


Google News
பெரம்பூர், பீஹாரைச் சேர்ந்தவர் அர்ஜுன், 33. இவர், சூலுார்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில், 15 ஆண்டுகளாக பணிபுரிகிறார். கடந்த 30ம் தேதி இரவு 8:00 மணியளவில், வேலைக்கு புதிதாக 11 பேரை அழைத்து சென்னை வந்தார்.

பெரம்பூர் ரயில் நிலையத்தில் இறங்கியோர், அங்கிருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் செல்ல மூன்று ஆட்டோக்களில் ஏறினர். ஓட்டேரி, செங்கை சிவம் மேம்பாலம் வழியாக சென்றபோது, திடீரென ஆட்டோவை நிறுத்திய ஓட்டுனர்கள், வடமாநில வாலிபர்களை மிரட்டி பணம் கேட்டு மிரட்டினர்.

அப்போது அவ்வழியே வந்த ரோந்து போலீசாரை பார்த்ததும், இரண்டு ஆட்டோ ஓட்டுனர்கள் வண்டியை எடுத்துக் கொண்டு வடமாநில வாலிபர்களிடம் இருந்து பறித்த 7,000 ரூபாயோடு தப்பினர். மூன்றாவது ஆட்டோ ஓட்டுனரான பெரம்பூரைச் சேர்ந்த மதன்குமார், 45, என்பவர் போலீசாரிடம் சிக்கினார். மதன்குமார் அளித்த தகவலின்படி, துரை மற்றும் 'பாம்' கார்த்தி ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

தொடர் சம்பவங்கள்


சில மாதங்களுக்கு முன், சென்ட்ரல் வந்திறங்கியவடமாநில வாலிபர்களிடம் இதேபோன்று ஆட்டோ ஓட்டுனர்கள் பணம் பறிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும், பெங்களூரில் இருந்து தனியார் நிறுவன நேர்முக தேர்வு வந்த இளம்பெண்ணிடம் ஆட்டோ ஓட்டுனர் வீட்டில் கடத்தி சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது போன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்க, விதிமுறைக்கு உட்பட்டு ஆட்டோ ஓட்டுனர்கள் தங்கள் பெயர், மொபைல் எண் உள்ளிட்ட விபரங்களை பயணியர் தெரியும்படி வைக்க வேண்டியது அவசியம்.

மேலும், போக்குவரத்து போலீசார் ஆய்வு நடத்தி விதிமீறலில் ஈடுபடுவோரை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us