ADDED : ஜூலை 13, 2024 12:24 AM
சென்னை, சென்னை கடற்கரை - செங்கை இடையிலான மின்சார ரயில் சேவை, நாளை காலை, 7:45 மணி முதல் இரவு 7:45 மணி வரை ரத்து செய்யப்படுகிறது. மேற்கண்ட நேரங்களில் எழும்பூர் - செங்கை தடத்தில் மின்சார சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இதன்படி, எழும்பூர் - தாம்பரம், எழும்பூர் - செங்கல்பட்டு, எழும்பூர் - திருமால்பூர் ரயில்கள் இயக்கப்படும்.
இதேபோல், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தாம்பரத்தில் இருந்து காலை 7:00 மணி முதல் இரவு 7:05 வரையில் 38க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.