/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மனைவியிடம் பேசியவருக்கு பீர் பாட்டில் தாக்குதல் மனைவியிடம் பேசியவருக்கு பீர் பாட்டில் தாக்குதல்
மனைவியிடம் பேசியவருக்கு பீர் பாட்டில் தாக்குதல்
மனைவியிடம் பேசியவருக்கு பீர் பாட்டில் தாக்குதல்
மனைவியிடம் பேசியவருக்கு பீர் பாட்டில் தாக்குதல்
ADDED : ஜூலை 15, 2024 12:44 AM
செம்மஞ்சேரி:அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் சங்கர் புரோஜா, 32. ஓ.எம்.ஆர்., குமரன் நகரில் வாடகை வீட்டில் வசித்து, தனியார் காவலாளியாக பணி புரிகிறார்.
நேற்றுமுன்தினம், வீட்டு வாசலின் நின்று கொண்டு, அசாமில் வசிக்கும் மனைவியிடம் மொபைல் போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியில் போதையில் நின்ற அஜித்குமார், 27, 'சத்தம் போட்டு பேசாதே' எனக் கூறி உள்ளார்.
இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த அஜித்குமார், பீர் பாட்டிலால் சங்கர் புரோஜா தலையில் தாக்கினார். பலத்த காயத்துடன் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
செம்மஞ்சேரி போலீசார், நேற்று, அஜித்குமாரை கைது செய்தனர்.