/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பட்ஜெட் அறிவிப்புகள் 100 இடத்தில் ஒளிபரப்பு பட்ஜெட் அறிவிப்புகள் 100 இடத்தில் ஒளிபரப்பு
பட்ஜெட் அறிவிப்புகள் 100 இடத்தில் ஒளிபரப்பு
பட்ஜெட் அறிவிப்புகள் 100 இடத்தில் ஒளிபரப்பு
பட்ஜெட் அறிவிப்புகள் 100 இடத்தில் ஒளிபரப்பு
ADDED : மார் 13, 2025 12:22 AM
சென்னை, தமிழக பட்ஜெட் அறிவிப்புகள், சென்னையில் 100 இடங்களில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.
சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்தி குறிப்பு:
தமிழக பட்ஜெட், சட்டசபையில் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது. இதை மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில், சென்ட்ரல் ரயில் நிலையம், அண்ணாநகர் டவர் பூங்கா, கோயம்பேடு பஸ் நிலையம், மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர் ஆகிய கடற்கரை உள்ளிட்ட 100 இடங்களில், காலை 9:30 மணி முதல் ஒளிப்பரப்பு செய்யப்பட உள்ளது. மேலும், 15ம் தேதி வேளாண் பட்ஜெட்டும், எல்.இ.டி., திரையில் ஒளிபரப்பு செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.