ADDED : ஜூலை 04, 2024 12:34 AM

புழல், புழல், பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் கிளாரா, 60. இவர் புழல், 23வது வட்ட தி.மு.க., முன்னாள் துணைச் செயலர். இவர் நேற்று மாலை 3:30 மணியளவில், புழல், ஜி.என்.டி., சாலை சைக்கிள்ஷாப் பேருந்து நிறுத்தம் அருகே சாலையை கடக்க முயன்றார்.
அப்போது, மாதவரத்தில் இருந்து புழல் நோக்கி வந்த டூரிஸ்ட் வேன், கிளாரா மீது மோதியது. இதில் கிளாரா துாக்கி வீசப்பட்டார். வேனும் நிலை தடுமாறி கவிழ்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே கிளாரா பலியானார். மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து ஏற்பட்டதும், சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிய வேன் ஓட்டுனரை போலீசார் தேடி வருகின்றனர்.