/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பாஸ்போர்ட் குறித்த சந்தேகம்? சேவை மையத்தை அணுகலாம் பாஸ்போர்ட் குறித்த சந்தேகம்? சேவை மையத்தை அணுகலாம்
பாஸ்போர்ட் குறித்த சந்தேகம்? சேவை மையத்தை அணுகலாம்
பாஸ்போர்ட் குறித்த சந்தேகம்? சேவை மையத்தை அணுகலாம்
பாஸ்போர்ட் குறித்த சந்தேகம்? சேவை மையத்தை அணுகலாம்
ADDED : ஜூலை 13, 2024 12:32 AM

சென்னை, பாஸ்போர்ட் பெறுவதை எளிமையாக்கும் வகையில், வாடிக்கையாளர் சேவை மையம் மற்றும் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கோவர்த்தன் கூறியதாவது:
பாஸ்போர்ட் சேவைகள், விண்ணப்பம் பூர்த்தி செய்வது குறித்த சந்தேகங்கள், பாஸ்போர்ட் பெற நேரம் ஒதுக்குவது, தேவையான ஆவணங்கள் குறித்த சந்தேகங்களை போக்க, மண்டல அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள, சேவை உதவி மையத்தை அணுகலாம்.
வேலை நாட்களில், காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை, 044 - 2851 3639, 2851 3640 ஆகிய தொலைபேசி எண்களில் அழைத்து, சந்தேகங்களைக் கேட்கலாம். +91 73053 30666 என்ற 'வாட்ஸாப்' எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
www.passportindia.gov.in இணையதளம், 'mPassport Seva' மொபைல் செயலி ஆகியவற்றில் விண்ணப்பங்களை பதிவிறக்கலாம். பாஸ்போர்ட் சேவைகளை வாடிக்கையாளரே பெறும் வகையில், எளிமைப்படுத்தப்பட்டு சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
எனவே, முகவர்களை அணுகவோ, மற்றவர்களிடம் விண்ணப்பங்கள், ஆவணங்கள் குறித்த தகவல்களையோ பகிர வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.