/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ரூ.90 லட்சம் நில மோசடி போலி 'வாரிசு' சிக்கினார் ரூ.90 லட்சம் நில மோசடி போலி 'வாரிசு' சிக்கினார்
ரூ.90 லட்சம் நில மோசடி போலி 'வாரிசு' சிக்கினார்
ரூ.90 லட்சம் நில மோசடி போலி 'வாரிசு' சிக்கினார்
ரூ.90 லட்சம் நில மோசடி போலி 'வாரிசு' சிக்கினார்
ADDED : ஜூலை 14, 2024 12:33 AM

ஆவடி, செங்கல்பட்டு, விளம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இப்ராஹிம், 76. இவர், கடந்த மாதம் 12ம் தேதி, ஆவடி மத்திய குற்றப்பிரிவில் புகார் ஒன்று அளித்திருந்தார்.
அதில் குறிப்பிட்டு இருந்ததாவது:
கொரட்டூர், பாலாஜி நகரில் எனக்கு சொந்தமாக 2,420 சதுர அடி நிலம் உள்ளது. இதை, அப்துல் ரஹ்மான் என்பவர் 'நான் அவரது தந்தை' என குறிப்பிட்டு, நான் இறந்ததாக போலியான இறப்பு மற்றும் வாரிசு சான்றிதழ் பெற்றுள்ளார்.
பின் 2022ல், அவரது மனைவி ஹசீனா என்பவருக்கு போலியாக தான செட்டில்மென்ட் எழுதி கொடுத்து, சார் - பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து கொண்டார்.
அதை வைத்து, பிரகாஷ் என்பவருக்கு பொது அதிகாரம் கொடுத்து, அதன் வாயிலாக மேற்கூறிய நிலத்தை செஞ்சம்மாள் என்பவருக்கு விற்பனை செய்துள்ளார். அந்த நிலத்தின் மதிப்பு 90 லட்சம் ரூபாய்.
போலி ஆவணங்கள் வாயிலாக நிலத்தை அபகரித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.
இதுகுறித்து விசாரித்த போலீசார் அம்பத்துார், கள்ளிகுப்பத்தைச் சேர்ந்த பிரகாஷ், 28, என்பவரை, நேற்று கைது செய்தனர்.