/உள்ளூர் செய்திகள்/சென்னை/ நல்லுார் மேம்பால சாலை பணி ஜி.எஸ்.டி.,யை விலக்க அரசு மறுப்பு நல்லுார் மேம்பால சாலை பணி ஜி.எஸ்.டி.,யை விலக்க அரசு மறுப்பு
நல்லுார் மேம்பால சாலை பணி ஜி.எஸ்.டி.,யை விலக்க அரசு மறுப்பு
நல்லுார் மேம்பால சாலை பணி ஜி.எஸ்.டி.,யை விலக்க அரசு மறுப்பு
நல்லுார் மேம்பால சாலை பணி ஜி.எஸ்.டி.,யை விலக்க அரசு மறுப்பு
ADDED : ஜூலை 13, 2024 12:21 AM
சென்னை, சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதியாக, மாதவரம் ரவுண்டானா - நல்லுார் இடையிலான 11 கி.மீ., சாலை உள்ளது.
இச்சாலையை, 6 வழியாக விரிவாக்கம் செய்வதற்கு, கடந்த 2006ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு, அதன் பின் திட்டம் கைவிடப்பட்டது.
நிலம் எடுப்பிற்கு, பல கோடி ரூபாய் செலவாகும் என்பதால், உயர்மட்ட சாலையாக மாற்ற முடிவு செய்யப்பட்டது.
இதற்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வாயிலாக, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது.
அதன்படி, மேம்பாலச் சாலை பணிக்கு 1,900 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதில் மத்திய, மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டிய 18 சதவீத ஜி.எஸ்.டி., கட்டணமும் அடங்கும்.
இதனால், ஒதுக்கிய நிதியில், 342 கோடியை, ஜி.எஸ்.டி.,க்கு செலவிட வேண்டிய நிலை, ஒப்பந்த நிறுவனத்திற்கு ஏற்படும்.
எனவே, கட்டுமான பணிக்கு கூடுதல் செலவாகும் என்பதால், மாநில அரசு தன் ஜி.எஸ்.டி., கட்டணத்தை விலக்கிக் கொள்ள வேண்டும் என, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வாயிலாக கேட்கப்பட்டு உள்ளது.
ஆனால், ஜி.எஸ்.டி., கட்டணத்தை விலக்கிக் கொள்ள முடியாது என, தமிழக அரசு கறாராக கூறியுள்ளது. இதனால், மேம்பாலச் சாலை அமைக்கும் பணிகளை துவங்குவது தாமதமாகி வருகிறது.
இதை காரணம் காட்டி, கடந்த 10 ஆண்டுகளாக இந்த சாலையை புனரமைக்காமல், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மெத்தனம் காட்டி வருகிறது.
சமீபத்தில், 38 கோடி ரூபாய் ஒதுக்கி, பணிகள் நடந்தன.
ஆனால், கனரக வாகனங்கள் போக்குவரத்தால் சாலை சேதமடைந்துள்ளதால், விபத்துகளும் அதிகரித்து வருகின்றன.
எனவே, மேம்பாலச்சாலை அமைக்கும் திட்டத்திற்கு தேவையான ஒத்துழைப்பை, தமிழக அரசு வழங்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.