ADDED : ஜூன் 18, 2024 12:08 AM
சென்னை, ஓட்டேரியைச் சேர்ந்த பிரசாந்த், 24, இதே பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்தார். புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த நரேஷ்குமார், 24, அரும்பாக்கம் விக்கி,25, ஆகியோரும் வழிப்பறியில் ஈடுபட்டு வந்தனர்.
அரியலுார் மாவட்டம், அமனக்கந்தோண்டி பகுதியைச் சேர்ந்த தண்டபாணி,36, சென்னை, தி.நகர் மாய ஒலி,28, உள்ளிட்ட நான்கு பேர், பள்ளி மாணவியரை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்தனர்.
அண்ணா சாலை, பார்டர் தோட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன்,23, அதே பகுதியைச் சேர்ந்த அஸ்ரப் பாஷா என்பவரை கொலை செய்ய முயற்சித்த வழக்கிலும், முகமது ஆதாம் என்பவரை கொலை செய்த வழக்கில், நெற்குன்றத்தைச் சேர்ந்த வெள்ளை செல்வா,23, என்பவரும் சிக்கினர்.
இவர்கள் உட்பட, 26 பேரை, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோட் உத்தரவிட்டார். அதன்படி, இவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்தாண்டில் இதுவரை, 677 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.