/உள்ளூர் செய்திகள்/சென்னை/ நீதிமன்றத்தை கயிறு கட்டி இழுத்து வழக்கறிஞர்கள் நுாதன போராட்டம் நீதிமன்றத்தை கயிறு கட்டி இழுத்து வழக்கறிஞர்கள் நுாதன போராட்டம்
நீதிமன்றத்தை கயிறு கட்டி இழுத்து வழக்கறிஞர்கள் நுாதன போராட்டம்
நீதிமன்றத்தை கயிறு கட்டி இழுத்து வழக்கறிஞர்கள் நுாதன போராட்டம்
நீதிமன்றத்தை கயிறு கட்டி இழுத்து வழக்கறிஞர்கள் நுாதன போராட்டம்
ADDED : ஜூலை 25, 2024 01:04 AM

திருவொற்றியூர், திருவொற்றியூர் குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றம், தனியார் திருமண மண்டபத்தில் ஏழு ஆண்டுகளாக வாடகை அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. இங்கு, மூன்று நீதிபதிகள், 300 மேற்பட்ட வழக்கறிஞர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
திருமண மண்டபம் நீதிமன்றமாக மாற்றப்பட்டதால், நீதிமன்றத்திற்கு உரிய அடிப்படையான வசதிகள் நீதிபதிகளுக்கான இடவசதிகள் இல்லை.
வழக்கறிஞர்கள், வழக்கு பதிந்தவர்கள் வந்து செல்வதற்கும், வாகனங்களை நிறுத்துவதற்கும் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதனால், திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே, சொந்த இடத்தில் நீதிமன்றத்தை செயல்பட வலியுறுத்தி, நீதிமன்றத்தை கயிறு கட்டி மாட்டு வண்டி மூலம் இழுத்து வழக்கறிஞர்கள் நுாதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர். போலீசார் அவர்களிடம் சமரச பேச்சு நடத்தியதை அடுத்து, அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.