Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மனைவியை அடித்து கொன்ற கொடூர கணவனுக்கு ஆயுள்'

மனைவியை அடித்து கொன்ற கொடூர கணவனுக்கு ஆயுள்'

மனைவியை அடித்து கொன்ற கொடூர கணவனுக்கு ஆயுள்'

மனைவியை அடித்து கொன்ற கொடூர கணவனுக்கு ஆயுள்'

ADDED : மார் 13, 2025 12:25 AM


Google News
Latest Tamil News
ஆவடி, ஆவடி அடுத்த கண்ணப்பாளையம், பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் மதன், 39. சொந்தமாக 'பீப்' சென்டர் நடத்தி வந்தார்.

இவர், கடந்த 2019ல், விவாகரத்தான சரிதா, 22, என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சரிதாவுக்கு, ஏற்கனவே 15 வயதில் பெண் குழந்தை உள்ளது. பின், மதனுக்கு, 4 வயதில் பெண் குழந்தை உள்ளது.

சரிதாவின் நடத்தையில் சந்தேகப்பட்ட மதன், அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த 2021, ஜன., 21ல், வழக்கம் போல் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அதில் ஆத்திரமடைந்த மதன், இரும்பு குழாயால் சரிதாவை அடித்து கொலை செய்தார். இது குறித்து வழக்கு பதிந்த ஆவடி போலீசார், மதனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு விசாரணை, திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று நடந்த இறுதி விசாரணையில், மதன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு ஆயுள் தண்டனை, 5,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி தேவி தீர்ப்பளித்தார்.

அதோடு, சரிதாவின் முதல் குழந்தையான ஷாலிக்கு, ஒரு லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுக்கு பின், மதன் நேற்று புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us