/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பெரம்பூர் ரயில் நிலையத்தில் விபத்துகளை தடுக்க சுற்றுச்சுவர் பெரம்பூர் ரயில் நிலையத்தில் விபத்துகளை தடுக்க சுற்றுச்சுவர்
பெரம்பூர் ரயில் நிலையத்தில் விபத்துகளை தடுக்க சுற்றுச்சுவர்
பெரம்பூர் ரயில் நிலையத்தில் விபத்துகளை தடுக்க சுற்றுச்சுவர்
பெரம்பூர் ரயில் நிலையத்தில் விபத்துகளை தடுக்க சுற்றுச்சுவர்
ADDED : ஜூலை 25, 2024 01:00 AM

சென்னை, சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் தடத்தில், பெரம்பூர் ரயில் நிலையம் முக்கியமானதாக இருக்கிறது. இந்த ரயில் நிலையம் வழியாக, 80க்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள், 150க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இதனால், இந்த ரயில் நிலையத்தில் பயணியர் வருகை அதிகரித்து வருகிறது. எனவே, பயணியருக்கான அடிப்படை வசதிகளுடன், மேம்பாட்டு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து, சென்னை ரயில் கோட்ட அதிகாரிகள் கூறியதாவது:
'அம்ரித் பாரத்' திட்டத்தின் கீழ், பெரம்பூர் ரயில் நிலையத்தில், பல்வேறு வசதிகளுடன் 17.86 கோடியில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
நடைமேடைகள் விரிவாக்கம், புதிய கூரை, கழிப்பிட வசதி, 'சிசிடிவி' கேமரா, கூடுதல் வாகன நிறுத்த வசதி உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
பயணியர் ஆபத்தான முறையில் இங்குள்ள ரயில் பாதையை கடந்து செல்வதை தடுக்க, உயரமாக தடுப்பு சுவர் அமைக்கும் பணிகளும் முடியும் நிலையில் இருக்கின்றன. அடுத்த சில மாதங்களில் அனைத்து பணிகளும் முடிந்து, பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.