/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பகிங்ஹாம் கால்வாயில் மெட்ரோ தடம் மயிலையில் மாற்றி அமைக்க பரிந்துரை பகிங்ஹாம் கால்வாயில் மெட்ரோ தடம் மயிலையில் மாற்றி அமைக்க பரிந்துரை
பகிங்ஹாம் கால்வாயில் மெட்ரோ தடம் மயிலையில் மாற்றி அமைக்க பரிந்துரை
பகிங்ஹாம் கால்வாயில் மெட்ரோ தடம் மயிலையில் மாற்றி அமைக்க பரிந்துரை
பகிங்ஹாம் கால்வாயில் மெட்ரோ தடம் மயிலையில் மாற்றி அமைக்க பரிந்துரை
ADDED : ஜூலை 26, 2024 12:17 AM
சென்னை, 'பகிங்ஹாம் கால்வாயில் நீரோட்டம் பாதிக்காத வகையில், மெட்ரோ ரயில் வழித்தடத்தை சிறிது மாற்றி அமைக்க வேண்டும்' நீர்வளத்துறை கடிதம் எழுதியுள்ளது.
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகிறது. இதில், லைட் ஹவுஸ் - பூந்தமல்லி, சிறுசேரி - மாதவரம் பால் பண்ணை இடையிலான இரண்டு வழித்தடங்கள் மயிலாப்பூர், கச்சேரி சாலை, மந்தைவெளி வழியாக கடந்து செல்கிறது.
இங்கு பகிங்ஹாம் கால்வாயின் குறுக்கே, மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்கப்படுகிறது.
'இதனால், கால்வாயில் நீரோட்டம் பாதிக்கப்படும். வடகிழக்கு பருவமழை காலங்களில் வெள்ளநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படும். எனவே, நீரோட்டத்தை பாதிக்காத வகையில், அங்கு அமையவுள்ள துாண் மற்றும் கல்வெர்ட்டை, சற்று மாற்றி அமைக்க வேண்டும்' என, மெட்ரோ ரயில் கட்டுமான ஒப்பந்த நிறுவனத்திற்கு, நீர்வளத்துறை சார்பில் கடிதம் அனுப்பபட்டு உள்ளது. இதை கட்டுமான நிறுவனம் பரிசீலிப்பதாக உறுதியளித்துள்ளது.