/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சாலையில் மண் குவியல் மாநகராட்சி அகற்றம் சாலையில் மண் குவியல் மாநகராட்சி அகற்றம்
சாலையில் மண் குவியல் மாநகராட்சி அகற்றம்
சாலையில் மண் குவியல் மாநகராட்சி அகற்றம்
சாலையில் மண் குவியல் மாநகராட்சி அகற்றம்
ADDED : ஜூலை 01, 2024 01:58 AM

குரோம்பேட்டை:ஜி.எஸ்.டி., சாலை வழியாக, டிப்பர், ஜல்லி, எம் - சாண்ட் லாரிகள் அதிகம் செல்கின்றன. இந்த லாரிகளில் இருந்து சிந்தும் மண், சிறு சிறு ஜல்லிகள், சாலையின் இருபுறத்திலும் மீடியன் ஓரத்தில் குவிகின்றன.
இதனால், வேகமாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், மண்ணில் சறுக்கி விழுந்து, விபத்தில் சிக்குகின்றனர்.
இச்சாலையை பராமரித்து, வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக சென்றுவர நடவடிக்கை எடுக்க வேண்டிய சாலை ஆய்வாளர்கள் கண்டுகொள்வதில்லை என, தாம்பரம் மாநகராட்சியிடம் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, குரோம்பேட்டை முதல் பல்லாவரம் வரை, ஜி.எஸ்.டி., சாலையின் இருபுறங்களிலும், மீடியன் ஓரத்தில் குவிந்துள்ள மண் குவியலை அகற்றும் பணியில், மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.