/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சென்னை - மஸ்கட் இடையே நேரடி விமான சேவை துவக்கம் சென்னை - மஸ்கட் இடையே நேரடி விமான சேவை துவக்கம்
சென்னை - மஸ்கட் இடையே நேரடி விமான சேவை துவக்கம்
சென்னை - மஸ்கட் இடையே நேரடி விமான சேவை துவக்கம்
சென்னை - மஸ்கட் இடையே நேரடி விமான சேவை துவக்கம்
ADDED : ஜூலை 13, 2024 12:41 AM

சென்னை,
ஓமன் நாட்டில் இயங்கும் சலாம் ஏர் நிறுவனம் புதிதாக, சென்னை - மஸ்கட் - சென்னை இடையே, நேரடி விமான சேவையை நேற்று துவங்கியுள்ளது.
அந்நிறுவனம், 'சென்னையில் இருந்து, வாரந்தோறும் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த விமானம் இயக்கப்படும்' என தெரிவித்துள்ளது.
'மஸ்கட்டில் காலை 4:15 மணிக்கு புறப்படும் அந்த விமானம், சென்னை வந்தடையும். பின், இங்கிருந்து காலை 5:00 மணிக்கு மஸ்கட் புறப்பட்டு செல்லும்' எனவும் தெரிவித்துள்ளது.
முதல் நாளான நேற்று, சென்னையில் இருந்து, 179 பயணியருடன் சலாம் ஏர் விமானம், மஸ்கட் புறப்பட்டுச் சென்றது. நேரடியாக மஸ்கட் செல்வதால், மூன்றே முக்கால் மணி நேரத்தில் விமானம் செல்லும் எனக் கூறப்படுகிறது.