/உள்ளூர் செய்திகள்/சென்னை/ஒப்பந்ததாரர்களுடன் அதிகாரிகள் கைகோர்ப்பு?ஒப்பந்ததாரர்களுடன் அதிகாரிகள் கைகோர்ப்பு?
ஒப்பந்ததாரர்களுடன் அதிகாரிகள் கைகோர்ப்பு?
ஒப்பந்ததாரர்களுடன் அதிகாரிகள் கைகோர்ப்பு?
ஒப்பந்ததாரர்களுடன் அதிகாரிகள் கைகோர்ப்பு?
UPDATED : ஜூலை 14, 2024 07:44 AM
ADDED : ஜூலை 14, 2024 12:30 AM

நீச்சல் குளம், விளையாட்டு திடல் ஒப்பந்தம் விடுவதில் வெளிப்படை தன்மை இல்லாததால், மாநகராட்சிக்கு லட்சக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னை மாநகராட்சியில் 19 பாட்மின்டன் கோர்ட், 16 ஸ்கேட்டிங் பார்க், 38 டென்னிஸ் கோர்ட் என, 73 விளையாட்டு அரங்குகள் உள்ளன. மெரினா, பெரியமேடு, திருவொற்றியூர் என, மூன்று இடங்களில் நீச்சல் குளங்கள் உள்ளன. இவை அ.தி.மு.க., ஆட்சியில் தனியார் பராமரிப்பில் விடப்பட்டிருந்தன. அதன் வாயிலாக மாநகராட்சிக்கு, ஆண்டுக்கு 84 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்து வந்தது. மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக விளையாட்டு பயிற்சிகளும், நீச்சல் பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வந்தன.
அதேநேரம், அனைத்து விளையாட்டு திடல்கள், நீச்சல் குளங்களும் ஒரே நபருக்கு ஒப்பந்தம் போட்டு கொடுக்கப்பட்டது ஏன் என்ற சர்ச்சையும் எழுந்தது. தி.மு.க., ஆட்சி வந்த பின், முல்லை மலர் என்ற அந்த ஒப்பந்ததாரருக்கு எதிராக பல கவுன்சிலர்கள் குரல் கொடுத்தனர்.
தலா 15 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் கேட்டதாகவும் சர்ச்சை எழுந்தது. அவர் வாடகை பாக்கி செலுத்தவில்லை என நோட்டீஸ் அனுப்பப்பட்டது. கொரோனா காலத்தில் விளையாட்டு திடல்கள், நீச்சல் குளங்கள் மூடப்பட்டதால், வருமானம் முடங்கியதால் வாடகை பாக்கியை ரத்து செய்யக்கோரி அவர் வழக்கு தொடர்ந்தார்.
ஒப்பந்தம்
பல வகையிலும் அழுத்தம் கொடுத்ததை தொடர்ந்து, விளையாட்டு திடல்கள் பராமரிப்பை முல்லைமலர் கைவிட்டார். மெரினா நீச்சல் குளத்தை மட்டும் பராமரித்து வந்தார். அந்த நீச்சல் குளத்தை அவர் மூன்றாண்டு பராமரிக்க மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஒப்புதல் கொடுத்திருந்த நிலையில், திடீரென அது மூன்று மாதமாக குறைக்கப்பட்டது. குறைக்கப்பட்ட ஒப்பந்த காலம், ஜூன் 30ம் தேதியுடன் முடிந்தது. நீச்சல் குளம் மூடப்பட்டது.
விதிகளின்படி இ-டெண்டர் விடாமல், அறிவிப்பும் வெளியிடாமல், மெரினா நீச்சல் குளத்தை வேறொரு ஒப்பந்ததாரருக்கு வழங்க ரகசியமாக பணிகள் முடிக்கப்பட்டு, மாநகராட்சி தலைமையிட ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சர்ச்சை கிளம்பியுள்ளது.
வெளிப்படை தன்மை இல்லாமல் இவ்வாறு ஒப்பந்தம் விடுவதால், மாநகராட்சிக்கு மீண்டும் லட்சங்களில் இழப்பு ஏற்படுவதோடு, பொதுமக்களின் நம்பிக்கை குறையவும் வழி ஏற்படும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
அவர்கள் கூறியதாவது:
விளையாட்டு திடல்கள், நீச்சல் குளங்களை உள்ளூர் அரசியல்வாதிகளுடன் இணைந்து பயிற்சியாளர்கள் ஆக்கிரமித்து, விளையாட்டு வீரர்களிடம் கட்டணம் வசூலித்து வந்தனர். அதை தவிர்க்கவே, தனியாரிடம் மாநகராட்சி ஒப்படைத்தது. அப்போதும், மாநகராட்சி அதிகாரிகள் வெளிப்படை தன்மையை பின்பற்றவில்லை; இப்போதும் பின்பற்றவில்லை. கவுன்சிலர்களுக்கு வேண்டியவர்கள், கமிஷன் தந்தவர்களுக்கு ஒப்பந்தம் அளிக்கின்றனர்.
தவறு நடக்கவில்லை என்றால், யார், யார் ஒப்பந்தம் கோரினர்; எந்த அடிப்படையில் யாருக்கெல்லாம் ஒப்பந்தம் அளிக்கப்படுகிறது என்ற வெள்ளை அறிக்கையை மாநகராட்சி வெளியிட வேண்டும்.
இவ்வாறு சமூக ஆர்வலர்கள் கூறினர்.
முறைகேடு இல்லை
சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
விளையாட்டு திடல்கள் ஒப்பந்தம் விட மாநகராட்சி மாதாந்திர கவுன்சிலில் அனுமதி பெறப்பட்டுள்ளது. விண்ணப்பித்தவர்களுக்கு வழங்கப்படுகிறது. மெரினா நீச்சல் குளம் ஒப்பந்தம் விடப்பட்டாலும், கவுன்சிலில் பின் ஏற்பு அனுமதி பெறப்படும். எந்த முறைகேடும் நடக்கவில்லை. நீச்சல் பயிற்சி பெறுவோர், பொழுதுபோக்க வருவோருக்காக விரைவாக ஒப்பந்தம் விடப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
முறைகேடு இல்லை
சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
விளையாட்டு திடல்கள் ஒப்பந்தம் விட மாநகராட்சி மாதாந்திர கவுன்சிலில் அனுமதி பெறப்பட்டுள்ளது. விண்ணப்பித்தவர்களுக்கு வழங்கப்படுகிறது. மெரினா நீச்சல் குளம் ஒப்பந்தம் விடப்பட்டாலும், கவுன்சிலில் பின் ஏற்பு அனுமதி பெறப்படும். எந்த முறைகேடும் நடக்கவில்லை. நீச்சல் பயிற்சி பெறுவோர், பொழுதுபோக்க வருவோருக்காக விரைவாக ஒப்பந்தம் விடப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கமிஷன்
பெரும்பாலான விளையாட்டு திடல்கள், உள்ளூர் அரசியல்வாதிகள், கவுன்சிலர்கள் கட்டுப்பாட்டில் தான் உள்ளன. பயிற்சியாளர்கள் நேரடியாக டெண்டர் எடுத்தாலும், அவர்கள் உள்ளூர் அரசியல்வாதிகளுக்கு பினாமியாகவே செயல்படுவர். குறைந்த முதலீட்டில் வருவாய் கிடைப்பதால், வெளிப்படையாக டெண்டர் விடுவதில்லை. கமிஷன் கொடுத்து, ஒப்பந்தம் பெறுகின்றனர்.
- பயிற்சியாளர்கள்
விசாரிக்கப்படும்
அனைத்தும் இ-டெண்டர் முறையில் தான் விடப்படுகின்றன. சில தன்னார்வ அமைப்புகள் சேவை மனப்பான்மையுடன் விளையாட்டு திடல்கள் கேட்கும்போது, டெண்டர் விடாமல், அவர்களின் பராமரிப்பில் விடப்படும். மெரினா நீச்சல் குளத்துக்கு 'டெண்டர்' விடவில்லை. யாருக்காவது விட முயற்சி நடக்கிறதா என்று விசாரிக்கப்படும்.
--- மகேஷ்குமார்,
துணை மேயர், சென்னை மாநகராட்சி
- நமது நிருபர் -