இன்று இனிதாக பகுதிக்கு (26/07/24)
இன்று இனிதாக பகுதிக்கு (26/07/24)
இன்று இனிதாக பகுதிக்கு (26/07/24)
ADDED : ஜூலை 26, 2024 12:09 AM
ஆன்மிகம்
பார்த்தசாரதி பெருமாள் கோவில்
வேதவல்லி தாயார் புறப்பாடு - -மாலை 5:30 மணி. தாயார் ஆஸ்தானம் - -மாலை 6:30 மணி. திருநடை காப்பு - -இரவு 9:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
கபாலீஸ்வரர் கோவில்
சஷ்டியை முன்னிட்டு சிங்காரவேலர் அபிஷேகம் -- மாலை 4:30 மணி. ஆடி இரண்டாவது வெள்ளியை முன்னிட்டு கற்பகாம்பாள் ஆலய பிரஹார விழா, வாயிலார் நாயனார் விழா -மாலை 5:00 மணி-. இடம்: மயிலாப்பூர்.
ஆண்டவர் கோவில்
ஆடி மாத இரண்டாவது வெள்ளியை முன்னிட்டு, மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு பூஜை, மஞ்சக் காப்பு அபிஷேகம், அலங்காரம் - -காலை 11:00 மணி. அம்மனுக்கு புடவை சார்த்தப்பட்டு, பக்தர்களுக்கு மஞ்சக்காப்பு, சுமங்கலி செட் பிரசாதம் வழங்கும் நிகழ்வு -மாலை 5:30 மணி. இடம்: வடபழனி.
குருவாயூரப்பன் கோவில்
கும்பாபிஷேகம் முன்னிட்டு, மண்டலாபிஷேகம் - -காலை 6:30 மணி. உபன்யாசம், நாமசங்கீர்த்தனம், இன்னிசை கச்சேரி- - மாலை 6:30 மணி. இடம்: நங்கநல்லுார்.
கல்யாண பசுபதீஸ்வரர் கோவில்
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, மண்டலாபிஷேக பூஜை, அபிஷேகம்- - காலை 6:00 மணி. மண்டல பூஜைகள், பிரதசா வினியோகம் - -மாலை 6:00 மணி. இடம்: அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம்.
நாம சங்கீர்த்தன உற்சவம்
சத்குரு பாதுகா பூஜை, நாம சங்கீர்த்தனங்கள், சீதா கல்யாணம், தேவாரம், திருப்புகழ், அபங்க சங்கீர்த்தனம் - -காலை 6:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை. இடம்: வரசித்தி விநாயகர் கோவில், நங்கநல்லுார்.
ஸ்ரீ பாலசுப்ரமணிய சங்கத்தின் சிறப்பு சங்கீர்த்தனம், மாலை 6:30 மணி முதல் 8:30 மணி வரை. இடம்: அருணகிரிநாதர் அரங்கம், குமரன் குன்றம், குரோம்பேட்டை.
வெற்றி விநாயகர் ஆன்மிக அறக்கட்டளை சார்பாக, 18ம் ஆண்டு ஆடி திருவிழா, காலை 6:00 மணிக்கு மங்கள இசை, காலை 8:00 மணி, ஸ்ரீ முத்தாளம்மன் - பக்தி நாடகம், இரவு 8:00 மணி. இடம்: ஓம்சக்தி இசக்கி அம்மன் கோவில், 1, ராஜாஜி தெரு, ஓம்சக்தி நகர், கள்ளிக்குப்பம், அம்பத்துார்.
ஸ்ரீ ஆஸ்திக சேவா சமிதியின் 17ம் ஆண்டு மஹோத்சவம் மற்றும் உலக நன்மைக்காக, காலை 7:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை. இடம்: அயோத்யா அஸ்வமேத மஹா மண்டபம், மேற்கு மாம்பலம்.
ஆடி வெள்ளி திருவிழா
ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோவிலில் காப்பு கட்டுதல், மாலை 6:00 மணி. பரதநாட்டிய நிகழ்ச்சி, இரவு: 7:15 மணி. இடம்: குமணன்சாவடி, பூந்தமல்லி.
குத்து விளக்கு பூஜை
சவுந்தரவல்லி தாயார் சமேத ஸ்ரீசுந்தரராஜ பெருமாள் கோவில். குத்து விளக்கு பூஜை மாலை 6:00 மணி. இடம்: சோமங்கலம்.
பொது
இலவச யோகா பயிற்சி
சத்யானந்தா யோக மையம் சார்பில் இலவச யோகா வகுப்பு - காலை 5:30 முதல் 7:00 மணி வரை. இடங்கள்: 2, திருவீதி அம்மன் கோவில், வேளச்சேரி மற்றும் ஸ்ரீ சுதர்ஷன் டேரஸ் ஹால், பி2, லட்சுமி நகர், பிரதான சாலை, நங்கநல்லுார்.
சேக்கிழார் ஆராய்ச்சி மையம் மற்றும் ஸ்ரீ ராமச்சந்திரா ஆராய்ச்சி பல்கலை இணைந்து நடத்தும், 32ம் ஆண்டு தெய்வச் சேக்கிழார் விழா. காலை 7:30 முதல் காலை 11:00 வரை, இடம்: ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டர், 24/13 ஏ, தெற்கு நிழற்சாலை, வாசுதேவ நகர் விரிவு, திருவான்மியூர்.
பாரம்பரிய பொருட்கள் கண்காட்சி
பூம்புகார் நிறுவனம் சார்பில் பாரம்பரிய கைவினைப் பொருட்கள் கண்காட்சி. -காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: சி.பி.ஆர்ட் மையம், ஆழ்வார்பேட்டை.