Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கடற்கரை - தாம்பரம் தடத்தில் மின் ரயில்கள் 60 நாள் மாற்றம்

கடற்கரை - தாம்பரம் தடத்தில் மின் ரயில்கள் 60 நாள் மாற்றம்

கடற்கரை - தாம்பரம் தடத்தில் மின் ரயில்கள் 60 நாள் மாற்றம்

கடற்கரை - தாம்பரம் தடத்தில் மின் ரயில்கள் 60 நாள் மாற்றம்

ADDED : ஜூன் 20, 2025 12:42 AM


Google News
சென்னை, ஐந்து விரைவு ரயில்கள், தாம்பரத்தில் இருந்து தற்காலிகமாக இயக்கப்பட உள்ளதால், அதற்கு ஏற்ப, மின்சார ரயில்களின் சேவையில், இன்று முதல் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து, சென்னை ரயில்வே கோட்டம் நேற்று வெளியிட்ட அறிக்கை:

எழும்பூர் ரயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் நடக்க உள்ளதால், ஐந்து விரைவு ரயில்கள், தாம்பரத்தில் இருந்து இயக்கப்பட உள்ளன. இதனால், கடற்கரை - தாம்பரம் தடத்தில், இன்று முதல் ஆகஸ்ட் 18ம் தேதி வரை, 60 நாட்களுக்கு மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

★ தாம்பரம் - கடற்கரை காலை 11:00 மணி ரயில் அதிகாலை 3:15 மணிக்கும், பகல் 12:15 மணி ரயில் அதிகாலை 4:25 மணிக்கும், தாம்பரத்தில் காலை 10:45 மணிக்கு புறப்படும் செங்கல்பட்டு - கும்மிடிப்பூண்டி ரயில், காலை 10:50 மணிக்கும் இயக்கப்பட உள்ளன

★ கடற்கரை - தாம்பரம் காலை 11:52 மணி ரயில், காலை 11:55 மணிக்கும், பகல் 12:10 மணி ரயில் 12:00 மணிக்கும், தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு 12:28 மணிக்கு புறப்படும் ரயில், 12:25 மணிக்கும் இயக்கப்பட உள்ளன

★ அரக்கோணம் - கடற்கரை ரயில் தாம்பரத்தில் 9:45 மணிக்கு பதிலாக 9:40 மணிக்கும் இயக்கப்படும்.

ஞாயிறு சிறப்பு ரயில்கள்

தாம்பரம் - கடற்கரை தடத்தில், இன்று முதல் ஆக., 18ம் தேதி வரையில், ஞாயிறுதோறும் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. தாம்பரத்தில் இருந்து அதிகாலை 3:15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், காலை 4:10 மணிக்கு கடற்கரைக்கு வரும். கடற்கரையில் இருந்து காலை 4:25 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், தாம்பரத்துக்கு காலை 5:20 மணிக்கு செல்லும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us