Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் 8 ரயில்கள் வரும் 15 வரை நீட்டிப்பு

 தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் 8 ரயில்கள் வரும் 15 வரை நீட்டிப்பு

 தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் 8 ரயில்கள் வரும் 15 வரை நீட்டிப்பு

 தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் 8 ரயில்கள் வரும் 15 வரை நீட்டிப்பு

ADDED : டிச 05, 2025 06:58 AM


Google News
சென்னை: எழும்பூர் ரயில் நிலையத்தில் நடந்து வரும் மேம்பாட்டு பணி காரணமாக, எட்டு விரைவு ரயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக் குவது, வரும் 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட அறிக்கை:

தஞ்சாவூர் - எழும்பூர் உழவன் விரைவு ரயில்; கேரளா மாநிலம் கொல்லம் - எழும்பூர் அனந்தபுரி, ராமேஸ்வரம் - எழும்பூர் சேது விரைவு ரயில், ராமேஸ்வரம் - எழும்பூர் விரைவு ரயில்கள் இன்று முதல் 14ம் தேதி வரை தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.

எழும்பூர் - தஞ்சாவூர் உழவன் விரைவு ரயில், எழும்பூர் - கொல்லம் அனந்தபுரி, எழும்பூர் - ராமேஸ்வரம் சேது விரைவு ரயில், எழும்பூர் - ராமேஸ்வரம் விரைவு ரயில்கள் இன்று முதல் வரும் 15ம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும்.

எழும்பூர் - மும்பை சி.எஸ்.டி., விரைவு ரயில் நாளை முதல் 15ம் தேதி வரை சென்னை கடற்கரையில் இருந்து இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us