Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 83 வயது மூதாட்டிக்கு 'காவேரி'யில் இதய வால்வு மாற்றம்

83 வயது மூதாட்டிக்கு 'காவேரி'யில் இதய வால்வு மாற்றம்

83 வயது மூதாட்டிக்கு 'காவேரி'யில் இதய வால்வு மாற்றம்

83 வயது மூதாட்டிக்கு 'காவேரி'யில் இதய வால்வு மாற்றம்

ADDED : அக் 10, 2025 07:57 AM


Google News
Latest Tamil News
சென்னை; இதய மிட்ரல் வால்வில் கால்சியம் படிந்து, பாதிப்புக்குள்ளான 83 வயது மூதாட்டிக்கு அறுவை சிகிச்சையின்றி செயற்கை வால்வு மாற்றி, சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனை டாக்டர்கள் குணப்படுத்தி உள்ளனர்.

இதுகுறித்து, மருத்துவமனையின் செயல் இயக்குநர் அரவிந்தன் செல்வராஜ் கூறியதாவது:

இதயத்தில் கதவைப்போல் திறந்து மூடும் அமைப்புடையது மிட்ரல் வால்வு எனப்படும் ஈரிதழ் நாளம். இந்த வால்வில், கால்சியம் படிமம் படிந்தால் மூச்சுத்திணறல், இதயசெயலிழப்பு ஏற்படும்.

இப்பாதிப்புடன், 83 வயது மூதாட்டி மருத்துவமனைக்கு வந்தார். புற்றுநோய்க்காக ஏற்கனவே அவருக்கு, இரு முறை கதிரியக்க சிகிச்சை செய்யப்பட்டிருந்தது.

அதனால், திறந்த நிலை அறுவை சிகிச்சை மூலம் வால்வை மாற்ற இயலவில்லை.

இடையீட்டு இதய சிகிச்சை நிபுணர் அனந்தராமன் தலைமையில் டாக்டர்கள் சி.சுந்தர், அருண்குமார் கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர், தொடை வழியே சிறு துளையிட்டு செயற்கையான மிட்ரல் வால்வை பொருத்தி சிகிச்சை மேற்கொண்டனர். தற்போது மூதாட்டி நலம் பெற்று இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us