/உள்ளூர் செய்திகள்/சென்னை/ரூ.26 கோடியில் கட்டிய படப்பை மேம்பாலத்தில்... விரிசல் திறந்து மூன்றே மாதங்களில் பல்லிளித்த அவலம்ரூ.26 கோடியில் கட்டிய படப்பை மேம்பாலத்தில்... விரிசல் திறந்து மூன்றே மாதங்களில் பல்லிளித்த அவலம்
ரூ.26 கோடியில் கட்டிய படப்பை மேம்பாலத்தில்... விரிசல் திறந்து மூன்றே மாதங்களில் பல்லிளித்த அவலம்
ரூ.26 கோடியில் கட்டிய படப்பை மேம்பாலத்தில்... விரிசல் திறந்து மூன்றே மாதங்களில் பல்லிளித்த அவலம்
ரூ.26 கோடியில் கட்டிய படப்பை மேம்பாலத்தில்... விரிசல் திறந்து மூன்றே மாதங்களில் பல்லிளித்த அவலம்
ADDED : செப் 23, 2025 11:41 PM

படப்பை : சென்னையை அடுத்த படப்பையில், 26.64 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட மேம்பாலம், திறந்த மூன்று மாதங்களில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டும், பள்ளங்கள் விழுந்தும் சேதமடைந்துள்ளது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வண்டலுார் - -வாலாஜாபாத் சாலை, சென்னை -- திருச்சி ஜி.எஸ்.டி., சாலை, வண்டலுார் -- மீஞ்சூர் வெளிவட்ட சாலை, சிங்கபெருமாள்கோவில் -- ஸ்ரீபெரும்புதுார் சாலை ஆகியவற்றை இணைக்கிறது.
ஒரகடம், வல்லம், ஸ்ரீபெரும்புதுார் பகுதிகளில் உள்ள சிப்காட் தொழிற்பூங்காக்களில், தொழிற்சாலைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், வண்டலுார் - -வாலாஜாபாத் சாலையில் வாகனங்கள் போக்குவரத்து அதிகரித்து, நெரிசல் ஏற்பட்டது.
இதற்கு தீர்வு காணும் வகையில், நான்குவழிச் சாலையான வண்டலுார் - வாலாஜாபாத் நெடுஞ்சாலையை ஆறுவழிச் சாலையாக விரிவுபடுத்த முடிவானது.
இந்த சாலையில், படப்பை பஜாரில், 800க்கும் மேற்பட்ட வணிக கடைகள் இருந்ததாலும், அப்பகுதி நிலத்தின் மதிப்பு மதிப்பு அதிகம் என்பதாலும், விரிவாக்கம் செய்ய வணிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதனால், படப்பை பஜாரில் சாலை விரிவாக்கம் செய்யப்படவில்லை. இதனால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதன்பின், படப்பை பஜார் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க, 26.64 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலம் அமைக்கும் பணி, 2022 ஜனவரியில் துவங்கியது.
படப்பை பஜாரில், 690 மீட்டர் நீளம், 17.20 மீட்டர் அகலத்தில், மூன்று ஆண்டுகளாக நடந்து வந்த மேம்பால சாலைப்பணிகள் முடிந்து, கடந்த ஜூன் மாதம் திறக்கப்பட்டது.
தற்போது, மேம்பாலத்தின் மீது ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.க்ஷ மேம்பாலம் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டு மூன்று மாதங்களே ஆகும் நிலையில், மேம்பாலத்தின் மீதுள்ள சாலையில், பல இடங்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன.
மேம்பாலத்தின் மீதுள்ள சாலையில் சிமென்ட் பெயர்ந்து, ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. அதனால், பள்ளம் மற்றும் விரிசல்களில் தார் ஊற்றி பூசி மறைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
வாலாஜாபாத் சுற்றுப்புறத்தில் உள்ள கல் குவாரிகளில் இருந்து, ஜல்லி மற்றும் பாறை கற்களை ஏற்றிக்கொண்டு, அதிக லோடுகளுடன் தினமும் ஏராளமான லாரிகள் செல்கின்றன.
அவற்றில், 50 டன்னுக்கு மேல் கட்டுமான பொருட்களை ஏற்றி செல்லும் லாரிகளால், படப்பை மேம்பாலத்தின் மீது அதிர்வு அதிகமாக உள்ளது. இதனால், மேம்பாலத்தின் மீது செல்லும் வாகன ஓட்டிகள் அச்சமடைகின்றனர்.
மேம்பாலத்தின் மீதுள்ள சாலையில், மைய இணைப்பு கம்பிகளும் சேதமாகியுள்ளன. சாலையோரம் கற்கள், மண் குவியல் அதிகரித்துள்ளதாலும், இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர்.
மேம்பாலம் மூன்று மாதங்களிலேயே சேதமடைந்ததால், கட்டுமான பணியின் தரம் குறித்து சந்தேகம் எழுகிறது. மேம்பாலம் மோசமான நிலையை அடையும் முன், விரிசல்களை சரிசெய்து, மீண்டும் சேதம் ஏற்படாதவாறு சீரமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பாலம் பலமாக உள்ளது ''படப்பை மேம்பாலம் பலமாக உள்ளது. பாலத்தின் மீது, 80 முதல் 90 டன் ஏற்றிக்கொண்டு செல்லும் கனரக வாகனங்களால், பாலத்தின் மீதுள்ள சாலையில், சிமென்டால் ஆன முதல் லேயர் சேதமடைந்துள்ளது. இதனால் பாலத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை. பாலத்தின் சேதமான சாலை சீரமைக்கப்படும். பாலத்தின் மீதுள்ள கான்கிரீட் சாலையை, தார் சாலையாக மாற்ற முடிவெடுத்துள்ளோம். - நெடுஞ்சாலை துறை அதிகாரி.
உறுதித்தன்மையை பரிசோதிக்கணும்! பயன்பாட்டிற்கு வந்து மூன்றே மாதங்களில் பாலம் சேதமடைந்திருப்பது, அதிர்சியாக உள்ளது. பாலத்தின் சேதமான சாலையால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதுகுறித்து புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. பாலத்தின் மீது செல்வதற்கே, வாகன ஓட்டிகள் அச்சமடைகின்றனர். பொதுவாக, 38 டன் சரக்கு ஏற்றி செல்ல வேண்டிய லாரிகளில், 50 டன்னுக்கு மேல் ஏற்றி செல்கின்றனர். பாலத்தின் கீழ் பகுதியில் செக்போஸ்ட் அமைத்து, அதிக எடையில் சரக்கு ஏற்றிச் செல்லும் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உறுதித்தன்மையை பரிசோதித்து பலத்தை சீரமைக்க வேண்டும்.- - பார்த்தசாரதி, பொதுச்செயலர், காஞ்சிபுரம் மாவட்ட பா.ஜ.,