Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கந்துவட்டி கேட்டு மிரட்டல் அ.தி.மு.க., பிரமுகர் கைது

கந்துவட்டி கேட்டு மிரட்டல் அ.தி.மு.க., பிரமுகர் கைது

கந்துவட்டி கேட்டு மிரட்டல் அ.தி.மு.க., பிரமுகர் கைது

கந்துவட்டி கேட்டு மிரட்டல் அ.தி.மு.க., பிரமுகர் கைது

ADDED : மே 13, 2025 12:31 AM


Google News
ஓட்டேரி :ஓட்டேரி, பட்டாளம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயா, 52. இவர், 2019ல் கணவர் தனசேகரின் மருத்துவ செலவுக்காக, ஓட்டேரி பகுதி அ.தி.மு.க., மகளிர் அணி வடசென்னை மாவட்ட இணை செயலராக உள்ள சரளா, 45, என்பவரிடம், 2.50 லட்ச ரூபாய் கடன் பெற்றுள்ளார்.

இதுவரை, வட்டியுடன் 12.40 லட்ச ரூபாயை, சரளா மற்றும் அவரது உறவினர்களான மீனாட்சி, ரேஷ்மா மற்றும் தேவிகாவின் வங்கி கணக்கிற்கு விஜயா அனுப்பியுள்ளார்.

ஆனால், மேலும் 25 லட்ச ரூபாய் கேட்டு தொல்லை கொடுத்ததோடு, கொலை மிரட்டலும் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து விஜயா, ஓட்டேரி காவல் நிலையத்தில் சரளா மற்றும் அவரது உறவினர்கள் மீது கந்துவட்டி கேட்டு மிரட்டுவதாக புகார் அளித்தார். போலீசார் விசாரித்து, சரளா, புளியந்தோப்பைச் சேர்ந்த மீனாட்சி, 31, சசிகலா, 28, மற்றும் பட்டாளத்தைச் சேர்ந்த மோகன், 36, ஆகிய நான்கு பேரை, நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us