ஆலோஜி தொழில்நுட்ப பள்ளி ஆண்டு விழா
ஆலோஜி தொழில்நுட்ப பள்ளி ஆண்டு விழா
ஆலோஜி தொழில்நுட்ப பள்ளி ஆண்டு விழா
ADDED : பிப் 11, 2024 12:24 AM

சென்னை, சென்னை, வேலம்மாள் குழும ஆலோஜி தொழில்நுட்ப பள்ளியின் ஆண்டு விழா, 'நம்மை சுற்றியுள்ள உலகம்' என்ற தலைப்பில், அதன் வளாகத்தில் நேற்று நடந்தது.
இதில், தொழில் துறை மன்ற பேச்சாளரும், மனிதவள வல்லுனருமான சார்லஸ் கிறிஸ்டோபர் காட்வின், சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மாணவர்களுக்கான ஆலோசனை வழங்கினார்.
நிகழ்ச்சியில், இணை இயக்குனர் சுரேகா வரவேற்பு உரையாற்றினார். அதை தொடர்ந்து, குழந்தைகள் தனித் திறமைகளை வெளிப்படுத்தும் நடனம், இசை, நடிப்பு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைக்கும் வகையில், பல நாடுகளின் பிரபலமான நடனங்கள் விழாவில் இடம்பெற்றன.
மேலும் கடந்தாண்டு 10ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு, பரிசுகள் வழங்கி, பள்ளி நிர்வாகம் கவுரவப்படுத்தியது.