Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ முதல்வர் படைப்பகத்திற்கு அயனாவரத்தில் பூமி பூஜை

முதல்வர் படைப்பகத்திற்கு அயனாவரத்தில் பூமி பூஜை

முதல்வர் படைப்பகத்திற்கு அயனாவரத்தில் பூமி பூஜை

முதல்வர் படைப்பகத்திற்கு அயனாவரத்தில் பூமி பூஜை

ADDED : செப் 30, 2025 02:06 AM


Google News
Latest Tamil News
அயனாவரம், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் எனும் சி.எம்.டி.ஏ., சார்பில், 6.50 கோடி ரூபாய் மதிப்பில், தரைத்தளத்துடன் கூடிய இரண்டு தளங்கள் கட்டப்பட உள்ள முதல்வர் படைப்பகத்திற்கான பூமி பூஜை, அயனாவரத்தில் நேற்று நடந்தது.

அண்ணா நகர் மண்டலம், அயனாவரம், யுனைடெட் இந்தியா நகரில் பழைய பொது நுாலகம் செயல்பட்டது. அதை மேம்படுத்தி, 'முதல்வர் படைப்பகம்' அமைக்க சி.எம்.டி.ஏ., திட்டமிட்டது.

அதற்காக, வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ், 6.50 கோடி ரூபாய் மதிப்பில் படைப்பகம் கட்டுவதற் கான பூமி பூஜை நேற்று நடந்தது. அமைச்சர் சேகர்பாபு, அண்ணா நகர் மண்டல குழு தலைவர் ஜெயின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மொத்தம், 8,500 சதுர அடி பரப்பளவில் உள்ள மனையில், 13,070 சதுர அடியில், தரைத்தளத்துடன் கூடிய இரண்டு தளங்கள் அமைக்கப்படும் என, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us