/உள்ளூர் செய்திகள்/சென்னை/போக்குவரத்து நெரிசல் செய்தியின் பாக்ஸ் மேட்டர் திருமங்கலத்திலும் திணறல்போக்குவரத்து நெரிசல் செய்தியின் பாக்ஸ் மேட்டர் திருமங்கலத்திலும் திணறல்
போக்குவரத்து நெரிசல் செய்தியின் பாக்ஸ் மேட்டர் திருமங்கலத்திலும் திணறல்
போக்குவரத்து நெரிசல் செய்தியின் பாக்ஸ் மேட்டர் திருமங்கலத்திலும் திணறல்
போக்குவரத்து நெரிசல் செய்தியின் பாக்ஸ் மேட்டர் திருமங்கலத்திலும் திணறல்
ADDED : ஜன 24, 2024 12:23 AM
அண்ணா நகர் மண்டலம், 99வது வார்டு பகுதியில், திருமங்கம் 100 ஆடி சாலை உள்ளது. இந்த சாலையில், பாடி மேம்பாலத்தில் இருந்து கோயம்பேடை நோக்கி, கோயம்பேடில் இருந்து பாடியை நோக்கி செல்லும் இருபாதைகள் உள்ளன.
இச்சாலையில், இரண்டாம் கட்ட 'மெட்ரோ' ரயில் திட்டப் பணிகளுக்காக சாலை முழுவதும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், பெரும்பாலான இடங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. காலை மற்றும் மாலை நேரங்களில் கடுமையாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
குறிப்பாக, திருமங்கலம் - கோயம்பேடு பகுதியில், 100 அடி சாலையில் 'யு டர்ன்' இல்லாதால், குறைந்தது 2 கி.மீ., துாரத்திற்கு வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன.
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது :
கோயம்பேடில் இருந்து செல்லும் 100 அடி சாலையில் திருமங்கலம் பகுதியில், 'யு டர்ன்' இல்லை. அண்ணா நகர் 12வது பிரதான சாலை வழியாக சென்று தான் திரும்ப வேண்டும். அதேபோல், திருமங்கலத்தில் இருந்து 3 கி.மீ. சென்று, பாடி மேம்பாலத்தில் ஏறி திரும்ப வேண்டிய நிலை உள்ளது. இதனால், நெரிசல் அதிகரித்துள்ளது. குறிப்பிட்ட இடங்களில் 'யு டர்ன்' வசதி ஏற்படுத்தினால் நெரிசல் குறைய வாய்ப்புள்ளது.
திருமங்கலத்தில் உள்ள வணிக வளாகம் பகுதியில் வார இறுதி நாட்களில் சாலை முழுவதும் வாகனங்கள் படையெடுத்து நிறுத்தப்படுவதாலும் கடும் நெரிசல் நிலவுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.


