/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கோயம்பேடில் போன் திருடிய சிறுவன் கைது கோயம்பேடில் போன் திருடிய சிறுவன் கைது
கோயம்பேடில் போன் திருடிய சிறுவன் கைது
கோயம்பேடில் போன் திருடிய சிறுவன் கைது
கோயம்பேடில் போன் திருடிய சிறுவன் கைது
ADDED : ஜூன் 20, 2025 11:58 PM
கோயம்பேடு,ரெட்டேரி, விநாயகபுரத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ் கண்ணா, 55. இவர், கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பணிபுரிகிறார்.
இவர், நேற்று முன்தினம் இரவு பேருந்து நிலையத்தின், 6வது நடைமேடையில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது மர்மநபர் அவரது சட்டை பாக்கெட்டில் இருந்த மொபைல்போனை திருடும்போது, திடீரென விழித்துக்கொண்டார். பின் பொதுமக்கள் உதவியுடன் அந்த நபரை பிடித்து, கோயம்பேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
விசாரணையில், மொபைல் திருட்டில் ஈடுபட்டது கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த, 16 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. நேற்று சிறுவனை சீர்திருத்தப்பள்ளியில் போலீசார் சேர்த்தனர்.