/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சீனாவிலிருந்து இறக்குமதியான ரூ.20 கோடி சரக்குகள் திருட்டு 21 பேர் மீது வழக்கு பதிவு சீனாவிலிருந்து இறக்குமதியான ரூ.20 கோடி சரக்குகள் திருட்டு 21 பேர் மீது வழக்கு பதிவு
சீனாவிலிருந்து இறக்குமதியான ரூ.20 கோடி சரக்குகள் திருட்டு 21 பேர் மீது வழக்கு பதிவு
சீனாவிலிருந்து இறக்குமதியான ரூ.20 கோடி சரக்குகள் திருட்டு 21 பேர் மீது வழக்கு பதிவு
சீனாவிலிருந்து இறக்குமதியான ரூ.20 கோடி சரக்குகள் திருட்டு 21 பேர் மீது வழக்கு பதிவு
ADDED : செப் 26, 2025 12:34 AM
சென்னை :சீனாவில் இருந்து சென்னைக்கு, 90 கன்டெய்னர்களில் இறக்குமதி செய்யப்பட்ட, 20 கோடி ரூபாய் மதிப்புள்ள, பி.வி.சி.ரெசின் என்ற பிளாஸ்டிக் தயாரிப்புக்கான பவுடர் திருடு போயுள்ளது. இது தொடர்பாக, 21 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர்.
சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனம், சீனாவின் ஹாங்காங் நகரில் இருந்து, 'பி.வி.சி.ரெசின்' என்ற பிளாஸ்டிக் தயாரிக்க பயன்படும் பாலி வினைல் குளோரைடு பவுடரை, கடந்த மார்ச் மாதம் இறக்குமதி செய்தது.
மொத்தம், 20 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த பவுடர், 90 கன்டெய்னர்களில் சென்னை காட்டுப்பள்ளியில் உள்ள தனியார் துறைமுகத்திற்கு வந்தடைந்தது.
ஆனால், எட்டு கன்டெய்னர்கள் வந்ததற்கான ஆவணங்கள் ஏதும் இல்லை. இந்த கன்டெய்னர்கள் எப்படி மாயமானது என்பது தெரியவில்லை.
மீதமுள்ள, 82 கன்டெய்னர்களும், போலி ஆவணங்களை சமர்ப்பித்து, காட்டுப்பள்ளி தனியார் துறைமுகத்தில் இருந்து திருடப்பட்டு உள்ளன.
இதுகுறித்து, சீனாவில் உள்ள தனியார் நிறுவனத்தின் ஏற்றுமதி பிரிவு, தமிழக தலைமை செயல் அதிகாரி சுப்பிரமணியன், 54, என்பவர், ஆவடி கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து, துறைமுகத்தில் போலி ஆவணங்கள் தாக்கல் செய்து, கன்டெய்னர் திருட்டில் ஈடுபட்ட தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த, 21 பேர் மீது, நேற்று வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
மேலும், மாயமான எட்டு கன்டெய்னர்கள் எங்கே சென்றன என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.