Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ செம்மனுார் ஜுவல்லர்ஸ் கடை புதிய கிளை ஆவடியில் திறப்பு 

செம்மனுார் ஜுவல்லர்ஸ் கடை புதிய கிளை ஆவடியில் திறப்பு 

செம்மனுார் ஜுவல்லர்ஸ் கடை புதிய கிளை ஆவடியில் திறப்பு 

செம்மனுார் ஜுவல்லர்ஸ் கடை புதிய கிளை ஆவடியில் திறப்பு 

ADDED : அக் 05, 2025 12:27 AM


Google News
Latest Tamil News
சென்னை : செம்மனுார் இன்டர்நேஷனல் ஜுவல்லர்ஸ் புதிய கிளை, ஆவடியில் நேற்று திறக்கப்பட்டது.

செம்மனுார் இன்டர் நேஷனல் ஜுவல்லர்ஸ், 162 ஆண்டுகள் பாரம்பரியம் உடையது. கேரளா, தமிழகத்தின் பல இடங்களில் செயல்படும் இக்கடையின் புதிய கிளை, ஆவடியில் நேற்று திறக்கப்பட்டது.

செம்மனுார் குழுமத்தின் தலைவர் பாபி செம்மனுார், அமைச்சர் நாசர் மற்றும் நடிகை காஜல் அகர்வால் ஆகியோர், நகை கடையை திறந்து வைத்தனர்.

முதல் விற்பனையை, அமைச்சர் நாசர் துவக்கினார். கடையில், உலக தரத்திலான வைர ஆபரணங்கள் மற்றும் தங்க நகைகளின் தொகுப்பு இடம் பெற்றுள்ளன.

செம்மனுார் குழுமத்தின் தலைவர் பாபி செம்மனுார் கூறியதாவது:

துவக்க விழாவை முன்னிட்டு, பட்டை தீட்டப்படாத மற்றும் விலை உயர்ந்த வைர கற்கள் பதிக்கப்பட்ட ஆபரணங்களின் செய்கூலி மீது 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் பட்டை தீட்டப்படாத வைரம் வாங்குவோருக்கு, ஒரு தங்க நாணயம் இலவசம்.

குறைந்த சேதாரத்துடன் கூடிய 916 'ஹால்மார்க்' தங்க நகைகள், வாடிக்கையாளர்களுக்கு வழங்கப் படுகிறது. தங்க நகைகளுக்கு செய்கூலி இல்லை; சேதாரத்தில் தள்ளுபடி உண்டு.

எங்கள் நகை கடைகளில் கிடைக்கும் லாபத்தில் குறிப்பிட்ட ஒரு தொகை, அறக்கட்டளை மூலம் ஏழை மக்களுக்கு வழங்கப்படுகிறது. தென் இந்தியாவில் முதல் முறையாக நகைகளின் தரத்தை சோதித்து பார்த்து வாங்க, எங்கள் கடையில், 'கேரட் செக்கிங் மிஷின்' வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

நடிகை காஜல் அகர்வால் கூறுகையில், ''இந்நிகழ்ச்சியில் பங்கேற்பது மகிழ்ச்சியாக உள்ளது. அறக்கட்டளை மூலம் ஏழை மக்களுக்கு, இதயப்பூர்வமாக தொண்டு செய்து வருகின்றனர். அதற்கு வாழ்த்துகள்,'' என்றார்.

கடை திறப்பை முன்னிட்டு, ஆவடியைச் சேர்ந்த ஏழை நோயாளி களுக்கு அறக்கட்டளையின் சார்பில், பாபி செம்மனுார் நிதியுதவி வழங்கினார்.

குழுமத்தின் பொது மக்கள் தொடர்பு அலுவலர் எம்.ஜே.ஜோஜி நன்றியுரை வழங்கினார். நிகழ்ச்சியில், ஆவடி மாநகராட்சி மேயர் உதயகுமார், ஆவடி மாநகராட்சி மண்டல குழு தலைவர் ராஜேந்திரன் உட்பட பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us