Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ நீர்நிலைகள், பசுமை பரப்புக்கு பாதிப்பின்றி கட்டமைப்பு உருவாக்க சி.எம்.டி.ஏ., திட்டம் சென்னை 3வது முழுமை திட்டத்தில் சேர்ப்பதாக அறிக்கை

நீர்நிலைகள், பசுமை பரப்புக்கு பாதிப்பின்றி கட்டமைப்பு உருவாக்க சி.எம்.டி.ஏ., திட்டம் சென்னை 3வது முழுமை திட்டத்தில் சேர்ப்பதாக அறிக்கை

நீர்நிலைகள், பசுமை பரப்புக்கு பாதிப்பின்றி கட்டமைப்பு உருவாக்க சி.எம்.டி.ஏ., திட்டம் சென்னை 3வது முழுமை திட்டத்தில் சேர்ப்பதாக அறிக்கை

நீர்நிலைகள், பசுமை பரப்புக்கு பாதிப்பின்றி கட்டமைப்பு உருவாக்க சி.எம்.டி.ஏ., திட்டம் சென்னை 3வது முழுமை திட்டத்தில் சேர்ப்பதாக அறிக்கை

ADDED : செப் 14, 2025 02:47 AM


Google News
சென்னை,:'சென்னை மூன்றாவது முழுமை திட்டத்தில், நீர்நிலைகள், பசுமை பரப்பு பாதிப்பின்றி கட்டமைப்பு உருவாக்க, விரிவான வெள்ள கட்டுப்பாட்டு திட்டம் இணைக்கப்படும்' என, தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தில், சி.எம்.டி.ஏ., அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

சென்னையில் ஏற்படும் வெள்ள பாதிப்புகளுக்கு அதிக மழை மட்டுமல்லாது, நீர்நிலைகள், சதுப்பு நிலங்கள், நீர்ப்பிடிப்பு பகுதிகளில், மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட பாதிப்புகளும் காரணம் என, 2023 டிசம்பரில் நம் நாளிதழில் செய்தி வெளியானது.

அதன் அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்கு பதிந்து விசாரித்த தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் எனும் சி.எம்.டி.ஏ.,வின் உறுப்பினர் செயலர் பிரகாஷ் தாக்கல் செய்த அறிக்கை:

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள், வெள்ள பாதிப்புகளை தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

வெள்ள பாதிப்புகளை தடுப்பதற்கான திட்டங்களை, நீர்வளத்துறை அதிகாரிகள் தான் வகுக்க வேண்டும்.

நீர்நிலைகள், சதுப்பு நிலங்கள், நீர்ப்பிடிப்பு பகுதிகளை ஒட்டிய பகுதிகளில் கட்டட அனுமதி வழங்கும்போது, நீர்வளத்துறையின் பரிந்துரைகளை சி.எம்.டி.ஏ., பின்பற்றுகிறது.

சென்னை இரண்டாவது முழுமை திட்டத்தில், வருவாய் துறை ஆவணங்களில், ஆறுகள், கால்வாய்கள், குளங்கள் போன்ற நீர்நிலைகளாக குறிப்பிடப்பட்ட பகுதிகளில், மேம்பாட்டு திட்டங்கள் அனுமதிக்கப்படவில்லை.

இப்போது, சென்னை மூன்றாவது முழுமை திட்டம் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சென்னை பெருநகர் பகுதியில், 1,189 சதுர கி.மீ., பரப்பளவில் வெள்ள பாதிப்புகள் ஏற்படாத வகையில், ஆய்வை சி.எம்.டி.ஏ., துவக்கியுள்ளது.

நீர்நிலைகள் மற்றும் பசுமை பரப்புக்கு ஏற்ப கட்டமைப்புகளை உருவாக்க உள்ளது.

கால்வாய்கள் உட்பட அனைத்து நீர்நிலைகளையும் அடையாளம் காணவும், நீர்நிலைகள் பாதுகாப்பு, வெள்ள பாதிப்புகளை தடுப்பதற்கான நடவடிக்கைகளை பரிந்துரைக்கவும், இந்த ஆய்வு உதவும்.

நீர்வளத்துறையின் ஒப்புதலுக்குப் பின், இத்திட்டம், சென்னை மூன்றாவது முழுமை திட்டத்தில் இணைக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us