/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ரூ.19 லட்சம் திருப்பித்தர ஆணையம் உத்தரவு ரூ.19 லட்சம் திருப்பித்தர ஆணையம் உத்தரவு
ரூ.19 லட்சம் திருப்பித்தர ஆணையம் உத்தரவு
ரூ.19 லட்சம் திருப்பித்தர ஆணையம் உத்தரவு
ரூ.19 லட்சம் திருப்பித்தர ஆணையம் உத்தரவு
ADDED : செப் 25, 2025 12:49 AM
சென்னை :குறிப்பிட்ட காலத்தில் வீட்டை ஒப்படைக்காத கட்டுமான நிறுவனம் 19.48 லட்ச ரூபாயை வட்டியுடன் திருப்பித்தர வேண்டும் என, ரியல் எஸ்டேட் ஆணையம் உத்தர விட்டுள்ளது.
பெரும்பாக்கம் பகுதியில் 'செலைன் எஸ்டேட்ஸ்' நிறுவனம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்படுகிறது. இத்திட்டத்தில் வீடு வாங்க, பல்லவி என்பவர், 2019ல் ஒப்பந்தம் செய்தார்.
ஒப்பந்தத்தின் அடிப்படையில் அவர், 19.48 லட்ச ரூபாயை கட்டுமான நிறுவனத்திடம் செலுத்தி உள்ளார். ஆனால், ஒப்புக்கொண்ட, காலக்கெடுவுக்குள் அந்நிறுவனம் வீட்டை ஒப்படைக்கவில்லை.
இது குறித்து பல்லவி, ரியல் எஸ்டேட் ஆணையத்தில் புகார் செய்தார். ரியல் எஸ்டேட் ஆணையத்தின் தலைவர் ஷிவ் தாஸ் மீனா தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவு:
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனம் குறிப்பிட்ட கால கெடுவுக்குள் வீட்டை ஒப்படைக்கவில்லை. இதனால், பணத்தை திரும்ப பெற மனுதாரருக்கு உரிமை உள்ளது.
எனவே, மனுதாரர் செலுத்திய, 19.48 லட்ச ரூபாயை வட்டியுடன் சேர்த்து கட்டுமான நிறுவனம் திருப்பித்தர வேண்டும். உத்தரவு பிறப்பிக்கப்பட்டதில் இருந்து, 60 நாட்களுக்குள் கட்டுமான நிறுவனம் பணத்தை திருப்பித்தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.