/உள்ளூர் செய்திகள்/சென்னை/மாநகராட்சி பள்ளி துாய்மை பணியாளர்கள் பல மாதங்களாக ஊதியம் இன்றி தவிப்பு கவுன்சிலர் குற்றச்சாட்டுமாநகராட்சி பள்ளி துாய்மை பணியாளர்கள் பல மாதங்களாக ஊதியம் இன்றி தவிப்பு கவுன்சிலர் குற்றச்சாட்டு
மாநகராட்சி பள்ளி துாய்மை பணியாளர்கள் பல மாதங்களாக ஊதியம் இன்றி தவிப்பு கவுன்சிலர் குற்றச்சாட்டு
மாநகராட்சி பள்ளி துாய்மை பணியாளர்கள் பல மாதங்களாக ஊதியம் இன்றி தவிப்பு கவுன்சிலர் குற்றச்சாட்டு
மாநகராட்சி பள்ளி துாய்மை பணியாளர்கள் பல மாதங்களாக ஊதியம் இன்றி தவிப்பு கவுன்சிலர் குற்றச்சாட்டு
ADDED : பிப் 12, 2024 02:10 AM
கோடம்பாக்கம்:கோடம்பாக்கம் மண்டல தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில், மண்டலக்குழு கூட்டம் நடந்தது. கோடம்பாக்கம் அம்பேத்கர் சாலையில் உள்ள மண்டல அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், உதவி கமிஷனர் முருகேசன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதில், 134வது வார்டு பா.ஜ., கவுன்சிலர் உமா ஆனந்தன் கூறியதாவது:
மேற்கு மாம்பலத்தில் குடிநீர் வாரியம் குழாய் மாற்ற தோண்டிய பள்ளத்தை முறையாக மூடாததால், பல விபத்துகள் நடந்தன.
தற்போது, மீண்டும் வார்டில் பள்ளம் தோண்ட உள்ளனர். இப்பணியின்போது அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். அதில், குடிநீர் வாரிய அதிகாரிகள் தொடர்பு எண்ணை குறிப்பிட வேண்டும்.
அவ்வாறு, செய்தால் மட்டுமே பணி செய்ய அனுமதிக்க வேண்டும். பள்ளம் தோண்டிய பின், பகுதி மக்கள் புகார் தெரிவித்தால் குடிநீர் வாரியம் கண்டுக் கொள்வதில்லை.
அதேபோல 128வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் ஸ்டெல்லா ஜாஸ்மின், ''எங்கள் வார்டில் உள்ள மாநகராட்சி பள்ளியில் பணிபுரியும் துாய்மை பணியாளர்களுக்கு, பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படாமல் உள்ளன. அதேபோல், விருகம்பாக்கம் பத்மாவதி நகரில் மழைநீர் வடிகால் அமைக்க வேண்டும்,'' என்றார்.
சாலை பராமரிப்பு
இதற்கு பதில் அளித்து, மண்டல உதவி கமிஷனர் முருகேசன் பேசுகையில், 'துாய்மை பணியாளர்கள் ஒப்பந்தம் விரைவில் கோரப்பட்டு, அவர்களுக்கு விடுபட்ட ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
பின் 129வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் ரவிசங்கர் பேசுகையில், ''எனது வார்டில், கடந்த மூன்று ஆண்டுகளாக சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது. சில இடங்களில், மழைநீர் வடிகால் இணைப்பு வழங்க வேண்டும்,'' என்றார்.
தொடர்ந்து 135வது வார்டு வி.சி. கவுன்சிலர் யாழினி பேசுகையில், ''வடபழனி ஏ.வி.எம்., தெருவில் உள்ள மாநகராட்சி சுடுகாட்டில், உள்ள ஊழியர்கள் பணம் பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
தேர்தலில் எதிரொலிக்கும்
அதற்கு பதில் அளித்த மண்டல குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி, 'கூட்டத்தில் ஆதாரமற்ற புகார்களை தெரிவிக்கக் கூடாது என, அறிவுறுத்தினார்.
இதற்கு 'இது என் குற்றச்சாட்டு மட்டுமில்லலை; பொதுமக்கள் அளித்த புகார்' என, கவுன்சிலர் யாழினி பதில் அளித்தார்.
இதில், 133வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் ஏழுமலை பேசுகையில், ''லோக்சபா தேர்தல் நெருங்கி வருகிறது. இந்த நேரத்தில் வரி கட்டாத நிறுவனங்கள் மற்றும் கடைகளுக்கு மாநகராட்சி வருவாய் துறை சார்பில், 'சீல்' வைக்கும் பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
''இது தேர்தலில் வேற மாதிரி விளைவை ஏற்படுத்தும்,'' என்றார்.
மேலும், 137வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் தனசேகரன் பேசுகையில், ''மண்டலத்தில் நடக்கும் ஏரியா சபா கூட்டத்தில் அதிகமானோர், அரசு காப்பீடு திட்டத்திற்காக மனு அளிக்கின்றனர். எனவே, மண்டலத்தில் அரசு காப்பீடு திட்டத்திற்காக, ஒவ்வொரு வார்டிலும், தனி முகாம் நடத்த வேண்டும்,'' என்றார்.